ரெனோ க்விட் 1.0 ஏஎம்டி விபரம் வெளியானது

பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடலில் கூடுதலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட வேரியன்ட் விபரங்கள் வெளியாகியுள்ளது. ரெனோ க்விட் ஈசி-ஆர் ( Kwid Easy-R) என அழைக்கப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் டாப் RxT(O) வேரியன்டில் மட்டுமே கிடைக்கும்.

க்ராஸ்ஓவர் ரக வடிவ தாத்பரியத்தை பெற்ற க்விட் கார் இந்திய குடும்பங்களின் மிக விருப்பமான காராக உருவெடுத்துள்ளது. 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவிதமான பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களை பெற்றுள்ள இந்த காரில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ஏஎம்டி கியர்பாக்ஸ் வாயிலாக ஆல்ட்டோ கே10 ஏஜிஎஸ் மாடலுக்கு போட்டியாக அமைய உள்ளது.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe ( Smart Control efficiency- SCe) பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி SCe மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்

க்விட் ஈசி-ஆர்  RXT (O) வேரியன்ட் வசதிகள்

சாதரன மாடலைவிட ஏஎம்டி கியர்பாக்ஸ் விலை ரூ.50,000 வரை கூடுதலாக அமையலாம் என்பதனால் ரூ.4.50 லட்சம் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. க்விட் ஏஎம்டி விலை நவம்பர் 9ந் தேதி  வெளியாகும்.

 

Exit mobile version