ரெனோ டஸ்ட்டர் பெட்ரோல் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி பெட்ரோல் மாடலில் 106 hp பவரை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

 ரெனோ டஸ்ட்டர் பெட்ரோல்

  • RxE மற்றும் புதிய RxS என இரு வேரியன்டில் டஸ்ட்டர் பெட்ரோல் விற்பனைக்கு கிடைக்கும்.
  • 106 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
  • ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரென்லாட் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் அதிகபட்சமாக 106 hp மற்றும் 142NM டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் முதன்முறையாக எக்ஸ்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

பெட்ரோல் காரின் மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 14.19 கிமீ மைலேஜூம் மற்றும் எக்ஸ்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஒரு லிட்டருக்கு 14.99 கிமீ மேலேஜ் தரும் என ஆராய் சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும் சில கூடுதலான வசதிகளை Rxl வேரியன்டில் பெற்றிருப்பதுடன் மற்றும் புதிய RxS மாடலில் தொடுதிரை நேவிகேஷன் சிஸ்டத்தை பெற்று விளங்குகின்றது.

டஸ்ட்டர் பெட்ரோல் விலை பட்டியல்

  • RxE வேரியன்ட் விலை ரூ.8.49 லட்சம்
  • RxL வேரியன்ட் விலை ரூ.9.30 லட்சம்
  • புதிய RxS வேரியன்ட் விலை ரூ. 10.32 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி )

Recommended For You