லம்போர்கினி யூரஸ் எஸ்யூவி

0
லம்போர்கினி சொகுசு கார் நிறுவனம் யூரஸ் எஸ்யூவி காரை வருகிற 2016 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளதாக லம்போர்கினி தகவல் வெளியிட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டிற்க்கு பின் எஸ்யூவி கார்களை மீண்டும் லம்போர்கினி தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். யூரஸ் எஸ்யூவி காருக்காக பாடி மற்றும் பேனல்களை வடிவமைக்க புதிய மெட்டலை பயன்படுத்துவதற்க்காக சோதனை செய்து வருகின்றது..

Lamborghini Urus SUV
இதற்க்கான பாடி பொருட்கள் கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியத்தை கொண்டு யூரஸ் கார் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த பாடியானது மிகவும் குறைவான எடை மற்றும் உறுதிமிக்கதாகவும் இருக்கும். லம்போர்கினி யூரஸ் எஸ்யூவி கார்களுக்காக மிக சிறப்பான நவீன எம்எல்பி பிளாட்பாரத்தல் உருவாக்க உள்ளது.
2016 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என ஆடியின் தலைமை செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லர் கூறியுள்ளார். லம்போர்கினி நிறுவனத்தை  இயக்குவது ஆடி நிறுவனமாகும்.
லம்போர்கினி யூரஸ் பற்றி முந்தைய பதிவினை படிக்க லம்போர்கினி எஸ்யூவி
இன்றுடன் ஆட்டோமொபைல் தமிழன் ஒரு வருடத்தினை வெற்றிகரமாக கடந்துள்ளது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கும், திரட்டிகளுக்கும் நன்றி…..