2017 லம்போர்கினி ஹுராகேன் RWD ஸ்பைடர் விற்பனைக்கு வந்தது

ரூ.3.45 கோடி விலையில் லம்போர்கினி ஹுராகேன் RWD ஸ்பைடர் ஸ்போர்டிவ் கார் விற்பனைக்கு வந்தது. புதிய ஹூராகேன் ரியர் வீல் டிரைவ் மாடலில் சிறிய அளவிலான தோற்ற மாற்றங்களை பெற்றுள்ளது.

lamborghini huracan rwd spyder

லம்போர்கினி ஹுராகேன்

580hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 5.2லி V10 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 540 Nm ஆகும். இதில் இடம்பெற்றுள்ள 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பவரை பின்புற வீல்களுக்கு அனுப்புகின்றது. ஹுராகேன் RWD ஸ்பைடர்  காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 319 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

ஹுராகேன் கூபே ரகத்தின் தோற்றத்திலே சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றுள்ள இந்த கன்வெர்டிபிள் மாடலின் முன்புறத்தில் பம்பர் மற்றும் ஏரோடைனமிக் போன்றவை மேம்பாடுகளை கண்டுள்ளது.

lamborghini huracan rwd spyder interior

lamborghini huracan rwd spyder steering

W வடிவிலான ஹெட்லேம்ப விளக்குகளுடன் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. 19 அங்குல அலாய் வீல் , பைரேலி பிஜீரோ டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இன்டிரியரில் பிளாக் நிறத்திலான டேஸ்போர்டு அமைப்பினை கொண்டுள்ளது.

2017 லம்போர்கினி ஹுராகேன் RWD ஸ்பைடர் விலை ரூ.3.45 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா )

lamborghini huracan rwd spyder rear