வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி கார்

0
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.28.5 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ள வால்வோ வி40 பாரீஸ் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்தியாவில் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டும் கிடைக்கும். இதன் ஆற்றல் 152பிஎஸ் மற்றும் டார்க் 350என்எம் ஆகும்.  இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 210கிமீ ஆகும். வால்வோ வி40 காரின் மைலேஜ் லிட்டருக்கு 16.81கிமீ ஆகும்.

Volvo V40 Cross Country

பாதுகாப்பு வசதிகளை பொருத்தவரை வால்வோ கார்களை குறை சொல்ல வாய்ப்பே என்றுமில்லை. அதனை உறுதிப்படுத்தும் வகையில் 7 காற்றுப்பைகளுடன் அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி விளங்குகின்றது. கால்களுக்கும்  காற்றுப்பைகள் உள்ளன.

தானாகவே இயங்கும் பிரேக்களை கொண்டுள்ள வி40 மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தும்.  டைனமிக் ஸ்டெபிள் கட்டுப்பாடு, டிராக்ஷன் கட்டுப்பாடு அமைப்பு, லேசர் உதவியுடன் இயங்கும் பிரேக் எனவே மிக சிறப்பான பிரேக்கிங் செயல்பாடு கிடைக்கும்.

Volvo V40 Cross Country dashboard

எல்இடி விளக்குகள், பகல் நேரத்திலும் ஒளிரும் விளக்குகள்,  ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்,  பிரேக் செய்யப்படும் பொழுது ஆற்றலை வீணக்காமல் அதனை மீண்டும் என்ஜினுக்கு அனுப்பும் வசதிகள், மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷன் அவை எலிகனஸ், ஈக்கோ மற்றும் பெர்ஃபார்மென்ஸ் , மிக சிறப்பான பார்க்கிங் நுட்பம், அவசர பிரேக்கின் பொழுது ஆக்ஸிலேட்டர் முழுதும் இயக்கத்தை நிறுத்திவிடும்.

வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி கார் சொகுசு தன்மையில் சிறந்து விளங்குகின்றது.

வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி விலை ரூ.28.5 லட்சம்

Volvo V40 Cross Country gear

Volvo V40 Cross Country rear

Volvo V40 Cross Country airbag

வால்வோ வி40 கார்

வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி