Automobile Tamilan

ஸ்கோடா ஆக்டாவியா ஸ்டைல் ப்ளஸ் வேரியண்ட் அறிமுகம்

ஸ்கோடா ஆக்டாவியா காரில் கூடுதல் சிறப்பம்சங்களை கொண்ட புதிய ஸ்டைல் ப்ளஸ் வேரியண்ட் வெளிவந்துள்ளது. ஸ்கோடா ஆக்டாவியா ஸ்டைல் ப்ளஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும்.
ஸ்கோடா ஆக்டாவியா
ஸ்கோடா ஆக்டாவியா 

ஆக்டாவியா காரின் எலகன்ஸ் வேரியண்டுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது ஸ்டைல் ப்ளஸ் வேரியண்டில் 8 காற்றுப்பைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆக்டாவியா ஸ்டைல் ப்ளஸ் வேரியண்டில் கீ லெஸ் என்ட்ரி வசதி, எனஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், ஸ்மார்ட்லிங்க் மொபைல் கனெக்ட்டிவிட்டி, ரியர் கேமரா, புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பேடல் ஷிஃப்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.

7 வேக DSG தானியங்கி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் . இதில் 1.8 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் என இரண்டிலும் ஆக்டாவியா ஸ்டைல் ப்ளஸ் வேரியண்ட் கிடைக்கும்.

ஸ்கோடா ஆக்டாவியா ஸ்டைல் ப்ளஸ் ரூ.22.84 லட்சம் ( மும்பை எக்ஸ்ஷோரூம்)

skoda Octavia Style Plus launched

Exit mobile version