ஹோண்டா டபிள்யூ-ஆர்வி கார் மார்ச் 16 முதல்

0

வருகின்ற மார்ச் 16ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி காரின் முன்பதிவு கடந்த சில வாரங்களாகவே நடந்து வருகின்ற நிலையில் டபிள்யூ-ஆர்வி காருக்கான இணைதளம் செயல்பட தொடங்கியுள்ளது.

honda wr v car

Google News

டபிள்யூ-ஆர்வி கார்

  • WR-V என்றால் ‘Winsome Runabout Vehicle’
  • மார்ச் 16ந் தேதி டபிள்யூ-ஆர்வி க்ராஸ்ஓவர் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது
  • டபுள்யூஆர்-வி பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் வரவுள்ளது.

டபுள்யூஆர்-வி மாடல் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக க்ராஸ்ஓவர் மற்றும் காம்பேக்ட் ரக தொடக்கநிலை எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. WR-V என்றால் ‘Winsome Runabout Vehicle’ என்பது விளக்கமாகும்.

டபிள்யூ-ஆர்வி என்ஜின் விபரம்

89Bhp பவர் மற்றும் 109Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது.

  • பெட்ரோல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ ஆகும்.

99Bhp பவர் மற்றும் 200Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

  • டீசல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.5 கிமீ ஆகும்.

honda wr v infotainment system

டபிள்யூஆர்-வி விலை

டபிள்யூஆர் வி கார் மார்ச் 16ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளதால் ஹோண்டா WR-V கார் விலை ரூ. 7.50 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 21,000 செலுத்திய WR-V காருக்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் முழுமையாக படிக்க – ஹோண்டா WR-V

honda wr v rear

ஹோண்டா WR-V படங்கள்

இணைக்கப்பட்டுள்ள ஹோண்டா WR-V காரின் 21 படங்களையும் பெரிதாக காண படத்தில் க்ளிக் பன்னுங்க

[foogallery id=”16161″]