Automobile Tamilan

ஹோண்டா WR-V கார் பற்றி தெரிய வேண்டிய 7 விஷயங்கள்

வருகின்ற மார்ச் 16ந் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஹோண்டா WR-V கார் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய என்ஜின் , வசதிகள் உள்பட விலை சார்ந்த விபரங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஹோண்டா WR-V கார்

கோவாவில் நேற்று தொடங்கியுள்ள மீடியா டிரைவ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டபிள்யூஆர்-வி காரில் உள்ள பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது. குறிப்பாக அனைத்து வேரியண்டிலும் இரண்டு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

1. டபிள்யூஆர்-வி டிசைன்

ஜாஸ் காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் ரக காரில்   பிஆர்-வி எஸ்யூவி மாடலில் உள்ளதை போன்ற ஹோண்டாவின் மிக அகலமான க்ரோம் பட்டைக்கு மத்தியில் அமைந்துள்ள ஹோண்டா லோகோ , முகப்பு விளக்கில் கருப்பு இன்ஷர்ட் , வட்ட வடிவத்தை பெற்ற பனி விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது.

பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் , பாடி கிளாடிங் , நேர்த்தியான 16 அங்குல அலாய் வீலை கொண்டுள்ளது. பின்புறத்தில் வித்தியாசமான அமைப்பினை வெளிப்படுத்தும் வகையில் டெயில்கேட் விளக்குகளுக்கு கீழாக பின்புற பம்பருக்கு மேலாக நம்பர் பிளேட் அமைந்துள்ளது.

2.  டபிள்யூஆர்-வி அளவுகள்

WR-V க்ராஸ்ஓவர் காரின் நீளம் 3999மிமீ , அகலம் 1734மிமீ மற்றும் உயரம் 1601மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2555மிமீ. விற்பனையில் உள்ள ஜாஸ் காரை விட WRV மாடல்  44மிமீ கூடுதல் நீளம் மற்றும்  25மிமீ கூடுதல் வீல்பேஸ் பெற்றுள்ளது.

WRV  காரின் பூட் கொள்ளளவு 363 லிட்டர் இது ஜாஸ் காரை விட 9 லிட்டர் கூடுதலாகும். மேலும் எஸ்யூவி கார்களுக்கு இணையான  188மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.

3. டபிள்யூஆர்-வி இன்டிரியர்

ஜாஸ் காரின் இன்டிரியர் அமைப்பினை சார்ந்ததாகவே வடிவமைக்கப்பட்டுள்ள டேஸ்போர்டில் அகலமான 7 அங்குல தொடுதிரை அமைப்பில் நேவிகேஷன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளுடன் விளங்குகின்றது. ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , சூரிய மேற்கூறை , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , ஸ்டியரீங் மவுன்டேட் கன்ட்ரோல் மற்றும் டீசல் கார் மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது.

கருப்பு, சில்வர் கலவை மற்றும் கருப்பு, நீலம் என இருவிதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

 

4. டபிள்யூஆர்-வி இன்ஜின்

89Bhp பவர் மற்றும் 109Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது.

99Bhp பவர் மற்றும் 200Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

 

5.  டபிள்யூஆர்-வி வசதிகள்

S மற்றும் VX என இரு வேரியண்டில் மட்டுமே வரவுள்ள WRV  காரில் இரண்டு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டு டாப் வேரியன்டில் எல்இடி உடன் இணைந்த ஹெட்லேம்ப் , இருவிதமான அப்ஹோல்ஸ்ட்ரி , ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , பார்க்கிங் கேமரா சூரிய மேற்கூறை , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , ஸ்டியரீங் மவுன்டேட் கன்ட்ரோல் மற்றும் டீசல் கார் மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது.

6. டபிள்யூஆர்-வி போட்டியாளர்கள்

ஃபோக்ஸ்வேகன் க்ராஸ் போலோ , ஃபியட் அர்பன் க்ராஸ், ஹூண்டாய் ஐ20 ஏக்டிவ் மற்றும் டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் போன்றவைகளுக்கு சவாலாக விளங்கும். இதுதவிர விட்டாரா பிரெஸ்ஸா, ஈகோஸ்போர்ட் போன்ற காம்பேக்ட் ரக மாடல்களுக்கும் சவலாக அமையும்.

7. டபிள்யூஆர்-வி விலை

டபிள்யூஆர் வி கார் மார்ச் 16ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளதால் ஹோண்டா WR-V கார் விலை ரூ. 7.50 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8. முன்பதிவு ஆரம்பம்

ரூ. 21,000 செலுத்திய WR-V காருக்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஹோண்டா WR-V படங்கள்

இணைக்கப்பட்டுள்ள ஹோண்டா WR-V காரின் 21 படங்களையும் பெரிதாக காண படத்தில் க்ளிக் பன்னுங்க…

[foogallery id=”16161″]

Exit mobile version