Automobile Tamilan

போக்ஸ்வேகன் வென்ட்டோ டீசல் இன்ஜின் மேம்பாடு

போக்ஸ்வேகன் வென்ட்டோ டீசல் செடான் காரின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மேம்படுத்தப்பட்டு விலையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதலாக புதிய சில்க் புளூ வண்ணத்தை பெற்றுள்ளது.

volkswagen-vento

 

EA189 1.5 லிட்டர் TDI டீசல் முந்தைய இன்ஜினை விட கூடுதலாக 5 ஹெச்பி வரை பவர் அதிகரிக்கப்பட்டு 110 ஹெச்பி வெளிப்படுத்தும் இன்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்கில் மாற்றமில்லாமல் 250 நியூட்டன்மீட்டரை தொடர்கின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. புதிய டீசல் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 22.27 கிமீ மற்றும் டிஎஸ்ஜி மைலேஜ் 22.15 கிமீ ஆகும்.

போக்ஸ்வேகன் எமியோ காரில் அறிமுகம் செய்யப்பட்ட புளூ சிலக் வண்ணத்தை மட்டும் கூடுதலாக பெற்றுள்ளது. மற்றபடி வேறு எந்த மாற்றங்களும் இல்லாமல் முந்தைய வசதிகளையே வென்ட்டோ பெற்றுள்ளது.

சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட இன்ஜினை பெற்ற ஸ்கோடா ரேபிட் மாடலும் விற்பனைக்கு வந்தது. புதிய டீசல் இன்ஜினை வென்ட்டோ பெற்றிருந்தாலும் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை. போலோ ஆல்ஸ்டார் மற்றும் அமியோ காரிலும் இதே இன்ஜின் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version