மஹிந்திரா டியூவி 300 பிளஸ் வருகை விபரம்

மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான டியூவி300 காரினை அடிப்படையாக கொண்ட 7 இருக்கை மாடல் மஹிந்திரா டி.யூ.வி 300 பிளஸ் என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.  கூடுதல் வீல்பேஸ் கொண்ட எஸ்யூவியின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்தியாவின் முன்னனி யுடிலிட்டி ரக தயாரிப்பாளராக விளங்கு வரும் மஹிந்திரா நிறுவனம் தங்களுடைய டியூவி300 எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்டதாக அமைந்திருக்கும் இந்த காரின் முன்பக்க தோற்றம் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் பக்கவாட்டில் கூடுதலாக நீளம் அதிகரிக்கப்பட்டு இடவசதி அதிகமாகவும் விற்பனையில் உள்ள மாடலை போன்ற ஜம்ப் இருக்கைகள் அல்லாமல் முன்னோக்கி பார்க்கும் இருக்கைகள் அமைய பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

டியூவி 300 பிளஸ்

பெரும்பாலான மஹிந்திரா கார்களில் மூன்றாவது வரிசை ஜம்ப் இருக்கைகளாக அமைந்திருக்கும். இதனை கருத்தில் கொண்டே புதிதாக முன்பக்க பார்க்கும் இருக்கைகளாக மாற்றி தொடக்கநிலை எம்பிவி மாடல்களுக்கு இணையாகவும் க்ரெட்டா, பி.ஆர்-வி போன்ற மாடல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய பெயராக டியூவி 300 பிளஸ் என இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது. மேலும், இந்த மாடலில் டெல்லி சந்தையில் விற்பனையில் 1.99 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது 140 ஹெச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடும் என தெரிகின்றது.

image source – iab

கூடுதல் வீல்பேஸ் பெற்ற இந்த எஸ்யூவி கார் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர புதிய கே.யூ.வி 100, ஸ்கார்ப்பியோ மற்றும் புத்தம் புதிய மஹிந்திரா எம்பிவி (U321) மற்றும் S201 எஸ்யூவி மாடல் ஒன்றும் வரவுள்ளது.

இதுதவிர மஹிந்திரா நிறுவனம் இன்னோவா மாடலுக்கு எதிராக புதிய எம்பிவி காரை சோதனை செய்து வருவது குறிப்பிடதக்கதாகும். நீங்களும் சோதனை ஓட்ட கார்களை படங்களை பிடித்து அனுப்பி வைக்க வேண்டிய முகவரி ; admin @ automobiletamilan.com

Exit mobile version