Automobile Tamil

மெர்சிடிஸ்-பென்ஸ் GLE 400 பெட்ரோல் விற்பனைக்கு வந்தது

மெர்சிடிஸ்-பென்ஸ் GLE 400 எஸ்யூவி காரில் இந்தியாவில் முதன்முறையாக பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலை  ரூ.74.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி பெட்ரோல் மாடலின் ஆற்றல் 333 hp ஆகும்.

mercedes-benz-gle-petrol-suv

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில்  12 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக மெர்சிடிஸ் அறிவித்திருந்த நிலையில் 7வது மாடலாக ஜிஎல்இ 400 பெட்ரோல் வேரியண்ட் வெளிவந்துள்ளது.மேலும் வருகின்ற செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து மெர்சிடிஸ் பென்ஸ் கார்களிலும் பெட்ரோல் வேரியண்ட் கிடைக்கும்.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படிருந்த  7 மாதங்களில் மிகுந்ந இழப்பினை சந்தித்த நிறுவனங்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். தடை நீக்கப்பட்டிருந்தாலும் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் பெட்ரோல் கார்களை அறிமுகம் செய்ய இந்தியா மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது.

விற்பனைக்கு வந்துள்ள பென்ஸ் GLE 400 4MATIC எஸ்யூவி காரில் 333 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் ட்வீன் டர்போ 6 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 480Nm ஆகும். இதில் 7 வேக ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஜிஎல்இ எஸ்யூவி காரில் 4 மேட்டிக் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் , 360 டிகிரி மேமரா , கீலெஸ் 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இஎஸ்பி , பிரேக் அசிஸ்ட் ஏர்மேட்டிக் சஸ்பென்ஷன் என பல வசதிகளை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஜிஎல்இ எஸ்யூவி காரில் GLE 250 d, GLE 350 d, GLE 400 மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக GLE 450 AMG கூபே மாடல்களும் விற்பனையில் உள்ளது.

Exit mobile version