Automobile Tamilan

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மைலேஜ் விபரம்

இன்று மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் முக்கிய விபரங்கள் தற்பொழுது வெளிவந்துள்ளது. இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காம்பேக்ட் எஸ்யூவி காராக விட்டாரா பிரெஸ்ஸா இருக்கும்.

maruti-suzuki-vitara-brezza-suv

லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் காம்பேக்ட் ரக எஸ்யூவி காராக விளங்க உள்ள விட்டாரா பிரெஸ்ஸா காரில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் ஆப்ஷன் பற்றி எந்த தகவலும் இல்லை.

89 bhp ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் DDiS200 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 200NM ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் பெட்ரோல் மாடல் எதிர்காலத்தில் வரலாம்.

கார் அளவுகள்

நீளம் : 3995மிமீ

அகலம் : 1790மிமீ

உயரம் : 1640மிமீ

வீல்பேஸ் : 2500மிமீ

கிரவுண்ட் கிளியரண்ஸ் ; 198 மிமீ

பூட் கொள்ளளவு : 328 லிட்டர்

LDi, LDi (O), VDi, VDi (O), ZDi மற்றும் ZDi+ 6 விதமான வேரியண்ட் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் பேஸ் வேரியண்ட் LDi வேரியண்டில் பவர் ஸ்டீயரிங் ஃபோல்டிங் பின் இருக்கைகள் , ஓட்டுநர் காற்றுப்பை , மெனுவல் ஏசி , ஆடியோ சிஸ்டம் பூளூடூத் போன்றவை உள்ளது.

LDi (O) வேரியண்டில் கூடுதலாக முன்பக்க இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் ,  இபிடி , முன்பக்க இருக்கை ப்ரி டென்ஸனர் இருக்கை பட்டை போன்றவை உள்ளது.

VDi வேரியண்டில் ரியர் பார்க்கிங் சென்சார் , கீலெஸ் என்ட்ரி , ரூஃப் ரெயில் , ஃபுல் வீல் கவர் , கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் , A-B-C பில்லர்களில் கருப்பு நிற வண்ணம் போன்றவை பெற்றுளது.

VDi (O) வேரியண்டில் கூடுதலாக முன்பக்க இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் ,  இபிடி , முன்பக்க இருக்கை ப்ரி டென்ஸனர் இருக்கை பட்டை போன்றவை உள்ளது.

ZDi டாப் வேரியண்டில் ஏபிஎஸ் , இபிடி , முன்பக்க இரு காற்றுப்பைகள் போன்வை நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 16 இஞ்ச் அலாய் வீல் , பியானோ கருப்பு சென்ட்ரல் கன்சோல் , தானியங்கி ஏசி , புராஜெக்டர் முகப்பு விளக்கு , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்கு , பனி விளக்கு போன்றவற்றுடன் பின்புற வைப்பர் மற்றும்  வாஷர் , முன் மற்றும் பின் பம்பர்களில் ஸ்கீட் பிளேட் போன்றவற்றை கொண்டுள்ளது.

ZDi (O) வேரியண்டில் இரட்டை வண்ணங்கள் , மாருதி ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மெண்ட் வசதியுடன் கூடிய ஆப்பிள் கார்பிளே , ஆண்ட்ராய்டு  ஆட்டோ போன்ற வசதிகளை பெற்றிருக்கும்.

மிகவும் ஸ்டைலிசான தோற்றத்தில் இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ள விட்டாரா பிரெஸ்ஸா காரின் போட்டியாளர்கள் டியூவி300 , ஈக்கோஸ்போர்ட் , டஸ்ட்டர் போன்றவை விளங்கும்.

அடுத்த சில மணிநேரங்களில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா கார் மாருதி டீலர்கள் வாயிலாகவே விற்பனை செய்யப்படும்.

விலை விபரத்தினை பெற இணைந்திருங்கள்…. Automobiletamilan

[envira-gallery id=”5777″]

 

Exit mobile version