வோக்ஸ்வேகன் அமியோ டீசல் விற்பனைக்கு வந்தது

0

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மேம்படுத்தப்பட்ட டீசல் இன்ஜினை பெற்ற வோக்ஸ்வேகன் அமியோ டீசல் செடான் கார் விற்பனைக்கு வந்தது. 110 hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் EA189 பெற்று 5 வேக மெனுவல் மற்றும் 7 வேக DSG ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

volkswagen-ameo

Google News

காம்பேக்ட் ரக செடான் பிரிவில் விற்பனையில் உள்ள ஃபிகோ ஆஸ்பயர் , மாருதி டிசையர் , டாடா ஸெஸ்ட் , ஹூண்டாய் எக்ஸ்சென்ட் , ஹோண்டா அமேஸ் போன்ற கார்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்த வல்ல மாடலாக அமியோ அமைந்துள்ள நிலையில் பெட்ரோல் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளிவந்திருந்தது.

வோக்ஸ்வேகன் டீசல்கேட் முறைகேடுக்கு பிறகு இந்தியாவில் முதன்முறையாக மேம்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை பெற்ற அமியோ முதல் காராக வோக்ஸ்வேகன் குழுமத்தில் வந்துள்ளது.  மேலும் காம்பேக் ரக செடான் பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த காராக அமியோ டீசல் விளங்குகின்றது. 110 hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDI (Turbocharged direct injection) இன்ஜின் டார்க் 230 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் 7 வேக DSG (direct-shift gearbox) ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

பெட்ரோல் காரை போல மூன்று வேரியன்ட்களில் வந்துள்ள காரில் டிரென்ட்லைன் கம்ஃபார்ட் லைன் மற்றும் ஹைலைன் என வந்திருந்தாலும் டாப் இரு வேரியன்டில் மட்டுமே ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. காம்பேக்ட் ரக செடான் செக்மென்ட்டில்  தானியங்கி மழை சென்ஸார் , க்ரூஸ் கன்ட்ரோல் , ஆன்டி பிஞ்ச் பவர் வின்டோஸ் , ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறக்கும் கதவுகள் , போன்றவற்றுடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஏபிஎஸ் அனைத்து வேரியண்டிலும் , முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் அனைத்து வேரியண்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது.  மேலும் வோக்ஸ்வேகன் அமியோ இஎஸ்பி மற்றும் ஹீல் ஹோல்டு அசிஸ்ட் டிஎஸ்ஜி ஆட்டோ வேரியன்டில் வந்துள்ளது.

volkswagen-ameo-dashboard

ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல் விலை

  • 1.5 TDI Trendline M/T – ரூ. 6,33,600
  • 1.5 TDI Comfortline M/T – ரூ. 7,35,150
  • 1.5 TDI Comfortline DSG – ரூ. 8,50,150
  • 1.5 TDI Highline M/T – ரூ. 8,16,900
  • 1.5 TDI Highline DSG – ரூ. 9,31,900

ஃபோக்ஸ்வேகன் அமியோ பெட்ரோல் மாடல் விலை பட்டியல்

  • 1.2 லிட்டர் டிரென்ட் லைன் –  ரூ. 5.24,300
  • 1.2 லிட்டர் கம்ஃபோர்ட் லைன் – ரூ. 5,99,950
  • 1.2 லிட்டர் ஹைலைன் – ரூ. 7.05 , 900
  • ( எக்ஸ்ஷோரூம் டெல்லி )