மஹிந்திரா ஸ்கார்ப்பியோ , எக்ஸ்யூவி500 கார்களில் புதிய என்ஜின்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ , எக்ஸ்யூவி500 கார்களில் புதிய 1.99 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளதாக தெரிகின்றது. டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் 2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கள் விற்பனை செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

mahindra-xuv500

மஹிந்திரா விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார்களில் 2.2 லிட்டர் எம் ஹாக் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதே என்ஜின் போர் அளவினை குறைத்து 1.99 லிட்டர் டீசல் என்ஜினாக மாற்றியமைத்துள்ளது.

இதன் மூலம் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் விற்பனை செய்ய தகுதியான காராக மீண்டும் ஸ்கார்ப்பியோ , எக்ஸ்யூவி500 மாடல்கள் இடம்பிடித்துள்ளது. டவுன்சைஸ் செய்யப்பட்டிருந்தாலும் ஆற்றல் விகித விவரம் சற்று மாறுபட்டுள்ளது.

எக்ஸ்யூவி500 காரில் 140bhp ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் தற்பொழுது 138bhp ஆற்றலை வழங்கும் 1.99 லிட்டர் என்ஜினாக மாற்றப்பட்டுள்ளது.

ஸ்கார்ப்பியோ காரில் 120bhp ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் தற்பொழுது 118bhp ஆற்றலை வழங்கும் 1.99 லிட்டர் என்ஜினாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க ; டெல்லியில் டீசல் கார் தடை

மஹிந்திரா இது பற்றி எவ்விதமான கருத்துகளும் அதிகார்வப்பூர்வமாக வெளியிடவில்லை. மேலும் புதிய என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்கள் டெல்லியில் விற்பனைக்கு செல்ல உள்ளது. இதே என்ஜின் நாடு முழுதும் விற்பனைக்கு செல்ல வாய்ப்புகள் குறைவு. புதிய 1.99 ஸ்கார்ப்பியோ , எக்ஸ்யூவி500 விலை விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Exit mobile version