Automobile Tamil

ஹூண்டாய் எலைட் ஐ20 ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு வந்தது

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ₹.914,795 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. எலைட் ஐ20 ஆட்டோமேட்டிக் கார் மேக்னா வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.

hyundai-elite-i20

 

மாருதி பலேனோ , ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி TSI மற்றும் ஹோண்டா ஜாஸ் சிவிடி போன்ற கார்களுக்கு நேரடியான போட்டியாளரான ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் பிரசத்தி பெற்று  விளங்குகின்றது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐ20 கார் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

ஹூண்டாய் எலன்டரா விற்பனைக்கு வந்தது

100 hp பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் VTVT பெட்ரோல் எஞ்சின் மாடலில் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இதன் டார்க் 130 Nm ஆகும். சாதரன வேரியண்டில் 83 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2லிட்டர் கப்பா எஞ்சின் மாடல் விற்பனையில் உள்ளது.

மேக்னா நடு வேரியண்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேக்னா வேரியண்டில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்றவை இல்லை. ஆனால் இரு காற்றுப்பைகள் , 1ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஆடியோ சிஸ்டம் உள்ளது.

₹.914,795 லட்சம் சென்னை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version