Automobile Tamilan

10,000 ஹெக்டர் எஸ்யூவி உற்பத்தி, 42,000 புக்கிங் அசத்தும் எம்ஜி மோட்டார்ஸ்

mg hector suv

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹலால் ஆலையில் 10,000 ஹெக்டர் எஸ்யூவி உற்பத்தியை கடந்திருப்பதுடன் 42,000 முன்பதிவுகளை கடந்துள்ளதை இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

28,000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்ற பிறகு தற்காலிகமாக முன்பதிவை நிறுத்தியிருந்த எம்ஜி மீண்டும் செப்டம்பர் 29 முதல் ரூ.30,000-ரூ.40,000 வரை விலை உயர்த்தி முன்பதிவை தொடங்கியது. இந்நிலையில் மறு முன்பதிவு எண்ணிக்கை 14,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனம், கூடுதலாக இரண்டாவது ஷிஃப்ட் மூலம் கார் உற்பத்தி எண்ணிக்கையை நவம்பர் மாதம் முதல் அதிகரிக்க உள்ளது.

விற்பனைக்கு வெளியிடப்பட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு ஹெக்டருக்கு இணைக்கப்பட்டுள்ள இ சிம் கார்டின் மூலம் ஓவர் டூ தி ஏர் அப்டேட் ஐஸ்மார்ட் சிஸ்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் கார் பிளே மற்றும் பல்வேறு மேம்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹெக்டர் என்ஜின் விபரம்

143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.

ஹெக்டர் எஸ்யுவி பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்), ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் வேரியன்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.91 கிமீ ஆகும்.

எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் டீசல் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.

எம்ஜி ஹெக்டர் விலை பட்டியல்

Exit mobile version