1000hp பவர்.., புதிய GMC ஹம்மர் EV பிக்கப் டிரக் அறிமுகமானது

ஜிஎம்சி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஹம்மர் EV பிக்கப் டிரக் மாடல் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் உற்பத்திக்கு செல்ல உள்ளது. முழுமையான எலக்ட்ரிக் மாடலாக ஹம்மர் மாறினாலும் தொடர்ந்து தனது ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்கும் வகையில் சூப்பர் டிரக் உருவாக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஹம்மர் பிராண்டை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கைவிட்டது. அதன்பிறகு சமீபத்தில் வெளியான டெஸ்லா சைபர்டிரக் மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் எலெக்ட்ரிக் உலகில் நுழைந்துள்ள ஹம்மர் இவி பிக்கப்பில் டாப் வேரியண்ட் மாடல் Edition 1 முதற்கட்டமாக, அதன்பிறகு ஹம்மர் EV3X வெளியிடப்பட உள்ளது. குறைந்த விலை ஹம்மர் EV 2X மாடல் 2023 ஆம் ஆண்டிலும், EV 2 மாடல் 2024 ஆம் ஆண்டும் வெளியிடப்பட உள்ளது.

GMC ஹம்மர் EV பிக்கப் டிரக்

முரட்டுத்தனமான தோற்றத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள ஹம்மர் டிரக்கில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு முகப்பு கிரில் 6 ஸ்லாட்டுகளாக பிரிக்கப்பட்டு HUMMER பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் மிகவும் உயரமான வீல் ஆர்சு, நேர்த்தியான அலாய் வீல் பெற்றுள்ளது.

பின்புறத்தில் தட்டையான எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டு 6 விதமான செயல்பாடுகளை பெற்ற மல்டி ப்ரோ டெயில் கேட் சேர்க்கப்பட்டுள்ளது.

இன்டிரியரில் 13.4 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அடுத்து டிரைவருக்கு 12.3 அங்குல டிஸ்பிளே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பிக்கப் டிரக்கின் மேற்கூறையை முழுமையாக நீக்கிக் கொள்ளும் வசதி இணைத்துள்ளனர்.

ஹம்மர் இவி எடிசன் 1 மாடலில் ஆற்றலை ஜெனரல் மோட்டார்ஸின் அனைத்து புதிய அல்டியம் பேட்டரிகளிலிருந்து, மூன்று மோட்டார்கள் மூலம் 1000 ஹெச்பி பவர் மற்றும் 15,592 என்எம் டார்க் வெளிப்படுத்துக்கின்றது.

எடிசன் 1 மாடல் 0-96 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.6 விநாடிகள் எடுத்துக் கொள்ளும். முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 560 கிமீ வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  350kW டிசி விரைவு சார்ஜர் கொண்டு சார்ஜிங் செய்யும்போது 10 நிமிடத்தில் 160 கிமீ பயணத்திற்கான சார்ஜிங் திறனை பெற இயலும்.

பல்வேறு விதமான நவீனத்துவமான டெக்னாலாஜி வசதிகளை பெறுகின்ற ஹம்மர் EV சூப்பர் டிரக்கில் 4 வீல் ஸ்டீரிங் செய்வதற்கான CrabWalk மோட், அடாப்ட்டிவ் ஏர் சஸ்பென்ஷன் மூலமாக 149 மிமீ வரை கிரவுண்ட கிளியரண்ஸ் அதிகரிக்கவும், virtual spotter” எனப்படுகின்ற டிரக்கினை சுற்றி 18 கேமரா (2 கேமரா டிரக்கின் அடிப்பகுதியில் உள்ளது) பெற்று பல்வேறு கோணத்தை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.

டாப் ஜிஎம்சி ஹம்மர் இவி எடிசன் 1 மாடல் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 800hp மற்றும் 12,881Nm ஹம்மர் EV 3X வேரியண்ட், அடுத்து 625hp மற்றும் 10,033Nm வேரியண்ட் என இரண்டும் 2022 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ளது.

GMC ஹம்மர் விலை பட்டியல்

Edition One – $112,595

Hummer EV3X – $99,995

EV2X – $89,995

Hummer EV2- $79,995

Web title : GMC Hummer EV Pickup debuts

Exit mobile version