திரும்ப பெறப்படுகிறது டோயோட்டா 86

டோயோட்டா நிறுவன ஆஸ்திரேலியாவில் 2012-13ம் ஆண்டுகளில் விற்பனை செய்த டோயோட்டா 86 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த வாகனங்களின் இன்ஜினின் உள்ள வால்வ் ஸ்பிரிங் குறைபாடு காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று டோயோட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்களில் உள்ள வால்வ் ஸ்பிரிங் கிராக் காரணமாக, திடீரென பவர் லாஸ் ஏற்பட்டு, டிரைவர் வாகனம் ஒட்டி செல்லும் போது விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த திரும்ப பெறுதல் நடவடிகையின் தொடர்ச்சியாக, சுபரு ப்ராஸ், இம்ப்ரஸா, ஃபாரஸ்டர் மற்றும் எக்ஸ்வி கார்களை திரும்ப பெறப்படும். மொத்தமாக 5407 கார்கள் திரும்ப பெறப்பட உள்ளது.

பிரச்சினை ஏற்பட்டுள்ள கார்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்ட டோயோட்டா நிறுவனம், அருகில் உள்ள டீலர்களை தொடர்பு கொண்டு பிரச்சினையை சரி செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

Exit mobile version