2016 ஆஸ்டன் மார்ட்டின் ரெபிட் விற்பனைக்கு வந்தது

0

ரூ. 3.29 கோடி விலையில் ஆஸ்டன் மார்ட்டின் ரெபிட் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய மாடலாக ரெபிட் விளங்கும்.

aston-martin-rapide

517 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 6.0 லிட்டர் வி12 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8 வேக ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்ட 4.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆஸ்டன் மார்ட்டின் ரெபிட் காரின் உச்ச வேகம் மணிக்கு 306 கிமீ ஆகும்.

பல நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட ரெபிட் காரில் 6.5 இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே அமைப்பில் , ஆடியோ , வீடியோ , நேவிகேஷன் , கார் தொடர்பான தகவல்கள் மற்றும் பல நவீன வசதிகளை பெற இயலும்.

2016-Aston-Martin-Rapide-interior

தானேவில் உள்ள இன்ஃபினிட்டி கார் ஷோரூம் வழியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள  ரெபிட் ஸ்போர்ட்ஸ் கார் விலை ரூ. 3.29 கோடி (எக்ஸ் ஷோரூம் தானே )

மேலும் படிங்க ; டட்சன் ரெடிகோ இன்று அறிமுகம்