2016 மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் விற்பனைக்கு வந்தது

0

மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் காரின் ஃபேஸ் லிஃப்ட் மாடல் ரூ. 24.95 லட்சத்தில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பென்ஸ் A கிளாஸ் தோற்றம் மற்றும் உட்புற மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ளது.

2016-Mercedes-A-Class

முந்தைய என்ஜினே புதிய பென்ஸ் A கிளாஸ் காரிலும் தொடர்கின்றது. பென்ஸ் ஏ கிளாஸ்  A180 எனப்படும் பெட்ரோல் வேரியண்டில் 120 ஹெச்பி ஆற்றல் மற்றும் 200 என்எம் டார்க் வழங்கும் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

A200d டீசல் வேரியண்டில் 136 ஹெச்பி ஆற்றல் மற்றும் 400 என்எம் டார்க் வழங்கும்  4 சிலிண்டர்  2.1 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் 7 வேக ஆட்டோமேட்டிக் டிசிடி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கம்ஃபோர்ட் , ஸ்போர்ட் மற்றும் ஈக்கோ என மூன்று விதமான மெர்சிடிஸ் டைனமிக் செலக்ட் அமைப்பு உள்ளது.

A 250 Sport (AMG Line), Polarsilber, Interieur Leder Schwarz / RED CUTA 250 Sport (AMG Line), polar silver, interior leather black / RED CUT

முந்தைய மாடலை விட தோற்றத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள முன் மற்றும் பின்புற பம்பர்கள் , புதிய எல்இடி ஹெட்லைட் , புதிய வடிவ அலாய் வீல் மற்றும் டெயில்கேட்டில் புதுப்பிக்கபட்ட எல்இடி விளக்குகளை கொண்டுள்ளது.

உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட 8 இஞ்ச் கமென்டோ இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஸ்மார்ட் மொபைலை தொடர்புகள் உள்ளன. மேலும் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் டேஸ்போர்டு போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் விலை

பென்ஸ் ஏ கிளாஸ்  A180 – ரூ.24.95 லட்சம்

பென்ஸ் ஏ கிளாஸ்  A200d – ரூ.25.95 லட்சம்

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

[envira-gallery id=”4104″]

Mercedes-Benz A class launched in India