2016 ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

0
புதிய ரேஞ்ச் ரோவர் எவோக் சொகுசு எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ.47.10 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் தொடக்க விலையில் விற்பனைக்கு  லேண்ட்ரோவர் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி

2016 ரேஞ்ச்ரோவர் இவோக் எஸ்யூவி காரின் தோற்றம் , உட்புறம் மற்றும் பல கூடுதல் நவீன வசதிகளை பெற்றுள்ளது. ஆனால் என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

187பிஹெச்பி ஆற்றல் மற்றும் 420என்எம் டார்க் வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 9 வேக தானியங்கி கியர்பாக்ஸ் உள்ளது.

ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் சொகுசு எஸ்யூவி காரின் முன்பக்க பம்பர் புதுப்பிக்கப்பட்ட இரண்டு விதமான கிரில் டிசைனை (டாப் வேரியண்டில் மாறுபட்ட டிசைன் ) பெற்றுள்ளது. ஸெனான் எல்இடி முகப்பு விளக்குகளுடன் இணைந்த பகல்நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில்கேட்டிலும் எல்இடி விளக்குகள் உள்ளது. புதிய அலாய் வீல் வடிவத்துடன் பின்பக்க ரியர் ஸ்பாய்லர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

எவோக் எஸ்யூவி

உட்புறத்தில் புதிய இருக்கைகள் , கதவு பேட்கள் , அதிகப்படியான இன்டிரியர் வண்ணங்களை கொண்டுள்ளது. மேலும் டேஸ்போர்டில் புதிய 8 இஞ்ச் இன்கன்ட்ரோல் டச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை பெற்றுள்ளது.

பல நவீன வசதிகளை பெற்றுள்ள இவோக் காரில் குறிப்படதக்க சில வசதிகள் தானாகவே திறக்கும் டெயில் கேட் அதாவது நாம் காரின் பின்புறத்திற்க்கு சென்றாலே தானாக திறக்கும். ஆல்டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் , சரவூன்ட் கேமரா அமைப்பு , 17 ஸ்பீக்கர்களை கொண்ட 825வாட்ஸ் மெரிடியன் சவூன்ட் சிஸ்டம் போன்றவை உள்ளது.

Pure, SE, HSE மற்றும் HSE Dynamic என 4 விதமான வேரியண்டில் எவோக் சொகுசு எஸ்யூவி கார் கிடைக்கின்றது.  3 வருட வாரண்ட்டி அல்லது 1 லட்சம் கிமீ வரை கிடைக்கும். எது முதலில் வருகின்றதோ அதுவரை வாரண்டி உள்ளது. மேலும்  3 வருட சர்வீஸ் திட்டமும் உள்ளது.

இந்தியாவிலே பாகங்களை தருவித்து ஒருங்கினைக்கப்பட உள்ள 2016 ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி காருக்கு இதுவரை 125 முன்பதிவுகளை பெற்றுள்ளது.

2016 ரேஞ்ச் ரோவர் எவோக் விலை விபரம்

  • Range Rover Evoque Pure – ரூ. 47.1 லட்சம்
  • Range Rover Evoque SE – ரூ. 52.9 லட்சம்
  • Range Rover Evoque HSE – ரூ. 57.7 லட்சம்
  • Range Rover Evoque HSE Dynamic – ரூ. 63.2 லட்சம்
{ அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் ப்ரீ ஆக்ட்ராய் விலை }
Landrover has launched the facelifted Range Rover Evoque at Rs.47.10 lakhs starting price in India. Range Rover Evoque gets styling tweaks and refreshed  interiors but engine retained.