Automobile Tamilan

2016 ஹூண்டாய் எலன்ட்ரா ஆகஸ்ட் 23 முதல்

வருகின்ற ஆகஸ்ட் 23 ,2016யில் மேம்படுத்தப்பட்ட 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடான் கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. புதிய பிளாட்ஃபாரத்தில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட சிறப்பான அம்சங்களை கொண்ட மாடலாக எலன்ட்ரா விளங்கும்.

2017-hyundai-elantra

ஃபூளூடியக் 2.0 டிசைன் தாத்பரியங்களை அடிப்படையாக கொண்ட 2016 ஹூண்டாய் எலன்ட்ரா காரில் புதிய அறுங்கோண  கிரில் , முன்பக்க பம்பரில்  பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் , நேர்த்தியான டைனமிக் பென்டிங் ஹெட்லைட் பெற்றுள்ளது. பக்கவாட்டில் புதிய அலாய் வீல் , பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகள் போன்றவற்றை பெற்று நேர்த்தியாக விளங்குகின்றது.

உட்புறத்தில் முந்தைய தலைமுறை மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் பிரிமியம் தோற்ற அமைப்பில் பல நவீன வசதிகளுடன் 7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ , ஆப்பிள் கார் பிளே , கார் நேவிகேஷன் யூஎஸ்பி ,பூளூடூத் ,பல வசதிகளை கட்டுப்படுத்த ஸ்டீயரிங் வீலில் பொத்தான்கள் , க்ரூஸ் கன்ட்ரோல் என பல வசதிகளை பெற்றிருக்கும்.

மேம்படுத்தப்பட்ட 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆப்ஷனுடன் கூடுதலாக புதிய 147 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்பொருத்தப்பட்டிருக்கும். 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோ பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

செவர்லே க்ரூஸ் , கரோல்லா அல்டிஸ் , ஸ்கோடா ஆக்டாவியா மற்றும் ரெனோ ஃபுளூயின்ஸ் போன்ற மாடல்களுக்கு நேரடியான போட்டியாளராக 2016 ஹூண்டாய் எலன்ட்ரா ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்தில் அமையலாம். ஹூண்டாய் டீலர்கள் வாயிலாக ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Exit mobile version