2016 ஹோண்டா பிரியோ விற்பனைக்கு வெளியானது

0

மேம்படுத்தப்பட்ட 2016 ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் கார் ரூ. 4.69 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.25,000 கூடுதலாக விலை பெற்று தோற்ற மாற்றங்கள் மற்றும் வசதிகளை பிரியோ பெற்றுள்ளது. டீசல் பிரியோ இன்ஜின் ஆப்ஷன் இடம்பெறவில்லை.

தோற்றம் மற்றும் இன்டிரியர் அமைப்பில் கூடுதல் மாற்றங்களை பெற்றுள்ள பிரியோ காரின் முகப்பில் கருப்பு நிற ஃபினிஷிங் கொண்ட பட்டையுடன் , தேன்கூடு வடிவ கிரிலினை கொண்ட ஏர் இன்டேக் , பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது.

Google News

இன்டிரியர் அமைப்பில் கூடுதலாக பல மாற்றங்களுடன் பீஜேய் வண்ணத்திலும் , டாப் மாடல்களில் கருப்பு வண்ணத்திலுமான இன்டிரியரை பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக புளூடூத் வாயிலாக அழைப்புகளை எற்கும் வசதி, 2 டின் மியூசிக் சிஸ்டம் போன்றவற்றை கொண்டுள்ளது.

முந்தைய இன்ஜின்ஆற்றலில் மாற்றம் இல்லாமல் அதிகபட்சமாக 87 bhp பவரையும், 109 Nm டார்க்கையும் வழங்கும்1.2 லிட்டர் i-VTEC  பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டடுள்ளது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது. முன்பக்கத்தில் இருகாற்றுப்பைகள் , ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களை பிரியோ பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா பிரியோ விலை பட்டியல்

  • E வேரியன்ட்: ரூ.4,69,000
  • S வேரியன்ட்: ரூ.520,000
  • VX வேரியன்ட்: ரூ.5,95,000
  •  VX AT வேரியன்ட்: ரூ.6,81,600

( எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை )

கிராண்ட் ஐ10 , ஸ்விப்ட் , ஃபிகோ , போல்ட் போன்ற கார்களுடன் சந்தையை பகர்ந்து கொண்டுள்ளது.