2017ல் நிசான் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி வருகை

மூன்றாவது தலைமுறை நிசான் எக்ஸ்-ட்ரெயில் ஹைபிரிட் எஸ்யூவி 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

 

முந்தைய தலைமுறை எக்ஸ் ட்ரெயில் மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட மாடலாக வரவுள்ள நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி காரில் டீசல் என்ஜின் ஆப்ஷனுக்கு மாற்றாக பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்த ஹைபிரிட் எஸ்யூவி மாடலாக வரவுள்ளது.

நிசான் எக்ஸ் ட்ரெயில் காரின் நீளம் 4640 மிமீ அகலம 1820மிமீ மற்றும் உயரம் 1710 மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2750 மிமீ மற்றும் 210மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.

144 PS திறன் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இதன் டார்க் 200 Nm ஆகும். RM31 எலக்ட்ரிக் மோட்டார் 30 PS திறன் மற்றும் 160 Nm டார்க் வெளிப்படுத்தும். இரண்டும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 174 PS ஆற்றல் மற்றும்  360 Nm டார்க் வெளிப்படுத்தும்.

எக்ஸ் ட்ரெயில் காரின் முக்கிய அம்சங்கள்

சமீபத்தில் நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்டிவ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நிசான் எக்ஸ்-ட்ரெயில் இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாகவே விற்பனைக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளதால் எக்ஸ்-ட்ரெயில் கார் விலை ரூ.30 லட்சம் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version