2017 ஆடி ஏ4 டீசல் கார் விற்பனைக்கு வந்தது

0

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி A4 35TDI மாடல் ரூ. 40.20 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய வசதிகளுடன் கூடுதலான பவரை வெளிப்படுத்தும் 2017 ஆடி ஏ4 டீசல் வெளியிடப்பட்டுள்ளது.

2017 Audi A4

Google News

2017 ஆடி ஏ4 டீசல்

2017 ஆடி A4 35 TDI காரில் 2.0 லிட்டர் TDI டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு  190 hp பவருடன்  400 Nm டார்க்கினை வழங்குகின்றது. முன்பக்க சக்கரங்களுக்கு பவரை கொண்டு செல்ல 7 வேக S-Tronic டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஏ4 டீசல் கார் 0 முதல்  100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு  7.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். அதிகபட்சமாக மணிக்கு  237 கிமீ வேகத்தை தொடும் திறனை கொண்டுள்ளது.

முந்தைய காரை விட 7 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற்றுள்ள புதிய ஏ4 டீசல் காரின் ஆராய் அளித்துள்ள மைலேஜ் ஒரு லிட்டருக்கு 18.25 கிமீ ஆகும்.

முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள புதிய ஏ4 டீசல் காரில் எல்இடி விளக்குகள் , எல்இடி ஆம்பியன்ட் லைட்டிங் , 17.5 அங்குல அலாய் வீல் , 12.3 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ,  8.3 அங்குல எம்எம்ஐ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்றவற்றுடன் டைனமிக் ,கம்ஃபோர்ட் , ஆட்டோ மற்றும் இன்டிஜூவல் என நான்கு விதமான டிரைவிங் மோட்களை பெற்று விளங்குகின்றது.

2017 ஆடி ஏ4 டீசல் விலை ரூ. 40.20 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)