ரூ. 49.9 லட்சத்தில் 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் மேம்படுத்தப்பட்ட 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடல் ரூ. 49.9 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷனிலும் 5 சீரிஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட 5 சீரிஸ் மாடல் புதிய கிளஸ்ட்டர் ஆர்க்கிடெச்சர் (CLAR-Cluster Architecture) பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு 7 சிரிஸ் காரின் வடிவ உந்துதலை பெற்றதாக வந்துள்ளது.

பல்வேறு நவீன வசதிகளை  பெற்றதாக வந்துள்ள 5 சீரிஸ்வகை மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், 10.25 அங்குலம் பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா, உள்பட, பிஎம்டபிள்யூ டிஸ்பிளே கீ வசதியுடன் கூடிய ரீமோட் பார்க்கிங் வசதி என பல்வேறு நுட்பங்களை  பெற்றுள்ளது.

5-சீரஸ் எஞ்சின்

ஸ்போர்ட் லைன் , லக்சூரி லைன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக M ஸ்போர்ட் என மொத்தம் 4 விதமான வேரியண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்க உள்ள 5 சீரிஸ் சொகுசு காரில் 530i வேரியன்டில் 252 ஹெச்பி பவருடன், 380 என்எம் டார்க் வெளிப்படுத்தும் டர்போசார்ஜ்டு 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

520d வேரியன்டில் 190 ஹெச்பி பவருடன், 400 என்எம் டார்க் வெளிப்படுத்தும் டர்போசார்ஜ்டு 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பெர்ஃபாமென்ஸ் ரக  M ஸ்போர்ட் 520d வேரியன்டில் 265 ஹெச்பி பவருடன், 400 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 6 சிலிண்டர் பெற்ற டர்போசார்ஜ்டு 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் 8 வேக ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் விலை

530i Sport Line: ரூ. 49.90 லட்சம்
520d Sport Line: ரூ. 49.9 லட்சம்
520d Luxury Line: ரூ. 53.60 லட்சம்
530d M Sport: ரூ. 61.30 லட்சம்

( விலை விபரம் அனைத்தும் ஜிஎஸ்டி வருகைக்கு பின்னர் பொருந்தும் )

உலகளவில் 8 மில்லியன் 5சீரிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 19,000 5 சீரிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ இந்தியா பிரிவு தலைவர் விக்ரம் பவா தெரிவித்துள்ளார்.

Recommended For You