2017 மெர்சிடிஸ் சிஎல்ஏ கார் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ செடான் கார் ரூ.31.71 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வுகளில் 2017 மெர்சிடிஸ் சிஎல்ஏ கிடைக்க உள்ளது.

2017-mercedes-benz-cla

மேம்படுத்தப்பட்ட சிஎல்ஏ காரில் பல தோற்ற மாற்றங்கள் மற்றும் புதிய வசதிகளை கூடுதலாக பெற்று , என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லை .மெர்சிடஸ் சிஎல்ஏ காரின் முகப்பில் புதிய ஹெட்லேம்ப் மற்றும் பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் , மேம்படுத்தப்பட்ட முன் மற்றும் பின் பம்பர்களை கொண்டுள்ளது. பகவ்வாட்டில் எந்த மாற்றங்களும் இல்லாம் 17 இஞ்ச் அலாய் வீல் ஆப்ஷனை கொண்டுள்ளது.

உட்புறத்தில் புதிய  8.0 இஞ்ச் திரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , மேம்படுத்தப்பட்ட புதிய தெளிவான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது. நவீன காலத்துக்கு ஏற்ப ஸ்மார்ட்போன் ஆதரவினை பெற்று ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ தொடர்புகளை ஏற்படுத்த இயலும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ எஞ்ஜின்

CLA200d மாடலில் 136 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.1 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 330 நியூட்டன்மீட்டர் ஆகும். CLA200 மாடலில் 184 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பபட்டுள்ளது. இதன் டார்க் 330 நியூட்டன்மீட்டர் ஆகும்.

இரு எஞ்ஜின் மாடலிலும் 7 வேக ட்யூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் மெர்சிடஸ் டைனமிக் செலக்ட் சிஸ்டம் வாயிலாக டிரைவிங் மோடினை தேர்வு செய்யலாம்.

2017 மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ விலை விபரம்

  • CLA 200 D Style – ரூ. 31.71 லட்சம்
  • CLA 200 D Sport – ரூ. 35.02 லட்சம்
  • CLA 200 Style (petrol) – ரூ. 34.02 லட்சம்

(அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை )

Recommended For You