ரூ. 30.65 லட்சத்தில் 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி களமிறங்கியது..!

0

ஆடம்பர கார்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வரி ஜிஎஸ்டிக்கு பிறகு குறைந்த காரணத்தால் முந்தையை மாடலை விட குறைந்த விலையில் 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2017 mercedes benz gla suv

Google News

2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி

கடந்த ஜனவரி மாதம் டெட்ராய்ட் மோட்டார் ஷோ வாயிலாக சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்ட பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி  இந்தியாவில் ரூ. 30.65 லட்சம் முதல் ரூ. 36.75 லட்சம் வரையிலான விலைக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் நான்கு விதமான வேறுபாட்டில் கிடைக்க உள்ளது.

2017 mercedes benz gla suv launch

அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 182 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் 7 வேக டியூல் கிளட்ச் பெற்ற ஆட்டோ கியர்பாக்ஸ் கொண்டதாக 1200-1400ஆர்பிஎம்-ல் 300என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.1 லிட்டர்  டீசல் எஞ்சின் மாடல் 135 ஹெச்பி மற்றும் 168 ஹெச்பி என இரு விதமான ஆற்றல் பெற்றிருப்பதுடன் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்தும் 220d வேரியன்டில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.

2017 mercedes benz gla suv 1

எஞ்சின் அட்டவனை

விபரம் 200 பெட்ரோல் 200d டீசல் டீசல் 220d 4MATIC
எஞ்சின் 1991 cc 2143 cc 2143 cc
பவர் 182 bhp  at5500 rpm 135 bhp at 3600-4400 rpm 168 bhp at 3400-4000 rpm
டார்க் 300 Nm at 1200-1400 rpm 300 Nm at 1600-3000 rpm 350 Nm @ 1400-3400 rpm
கியர்பாக்ஸ் 7 வேக DCT 7 வேக DCT 7 வேக DCT

மாற்றங்கள் மற்றும் வசதிகள்

ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி முந்தைய மாடலை விட மேம்படுத்தபட்ட தோற்ற அமைப்புடன் கூடிய புதிய பம்பர் , கிரில் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் உள்பட , இன்டிரியர் அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.

mercedes gla 2017

2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி விலை பட்டியல்
 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA  விலை பட்டியல் (இந்தியா)
Mercedes-Benz GLA 200d Style ரூ. 30.65 லட்சம்
Mercedes-Benz GLA 200 Sport ரூ.32.20 லட்சம்
Mercedes-Benz GLA 200d Sport ரூ. 33.65 லட்சம்
Mercedes-Benz GLA 220d 4MATIC ரூ. 36.75 லட்சம்

mercedes gla 2017 1 2017 mercedes benz gla facelift rear