ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய 2017 ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எவோக் எஸ்யுவி காரில் புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் எஞ்சின் சேர்க்கப்பட்டுள்ளது.
முந்தைய 2.2 லிட்டர் எஞ்சினுக்கு மாற்றாக 177 பிஎச்பி பவரை புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இதன் டார்க் 430 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு 4 வீல்களுக்கு பவரை எடுத்து 4 வீல் டிரைவ் மோடினை பெற்றுள்ளது. பெட்ரோல் எஞ்சின் மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.
தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் எல்இடி அடாப்டிவ் முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் போன்றவற்றுடன் உட்புறத்தில் 8 அல்லது 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்கன்ட்ரோல் டச் ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , 825W மெரீடியன் சவுன்ட் சிஸ்டம் , லெதர் இருக்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது.
லேண்ட் ரோவர் ரேஞ்ச்ரோவர் எவோக் மாடலின் HSE டாப் வேரியன்டில் எம்பெர் சிறப்பு எடிசன் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சாதரன மாடலை விட வித்தியாசப்படுத்தும் வகையில் கருப்பு மற்றும் சிவப்பு என இரு வண்ண கலவையை இன்டிரியர் மற்றும் எக்ஸ்டிரியரில் பெற்றிருக்கும்.
(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை )
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…