2017 வால்வோ V40 , V40 க்ராஸ் கன்ட்ரி கார்கள் விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட 2017 வால்வோ V40 , V40 க்ராஸ் கன்ட்ரி சொகுசு ஹேட்ச்பேக் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலான சிறப்புவசதிகள் மற்றும் பல்வேறு விதமான தோற்ற மாற்றங்களை இரு மாடல்களுமே பெற்றுள்ளன.

வால்வோ வி40 மற்றும் வால்வோ வி40 கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் முன்பக்க தோற்ற அமைப்பில் புதிய அம்சமாக தோர் சுத்தியல் வடிவலான எல்இடி முகப்பு விளக்குள் , கிரில் தோற்ற அமைப்பு மேம்பாடுகளை பெற்றுள்ளது. உட்புறத்தில் புதிய லெதர் இருக்கை அமைப்பு , புதிய இரட்டை வண்ண கலவை டேஸ்போர்டு , ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா , ரிவர்ஸ் சென்சார் போன்றவற்றுடன் பல்வேறு குறிப்பிடதக்க பாதுகாப்பு அம்சங்களான முதன்முறையாக பாதசாரிகளுக்கான ஏர்பேக் பெற்றுள்ளது.

முந்தைய என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வால்வோ வி40 காரில் 150 ஹெச்பி மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்ஜின் பயன்படுத்தபட்டு 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. வி40 காரில் டீசல் எஞ்ஜின் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கின்றது.

வால்வோ வி40 க்ராஸ் கன்ட்ரி காரில் வி40 டீசல் எஞ்ஜின் ஆப்ஷனுடன் கூடுதலாக பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் கிடைக்கின்றது.

வால்வோ வி40 கார் விலை

V40 D3 R-Design – ரூ. 25.49 லட்சம்

V40 D3 Kinetic – ரூ.28.53 லட்சம்

வால்வோ வி40 க்ராஸ கன்ட்ரி விலை

V40 CC D3 Inscription – ரூ.27.20 லட்சம்

V40 CC T4 Momentum  – ரூ. 29.40 லட்சம்

(அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை )

 

 

Recommended For You