2017 ஸ்கோடா ஆக்டாவியா கார் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் 15.50 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் 2017 ஸ்கோடா ஆக்டாவியா கார்விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றுள்ளது.

2017 ஸ்கோடா ஆக்டாவியா

வெளியாகியுள்ள ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தோற்ற அமைப்பு உள்பட பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்ட இன்டிரியருடன் முந்தைய எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

முந்தைய ஆக்டிவா மாடலை விட கூடுதலாக தோற்ற அமைப்பில் பம்பர், பூட் மற்றும் ஆலாய் வீல் போன்ற பகுதிகளில் மாறுதல் செய்யப்பட்டு பக்கவாட்டில் பெரிய அளவில் மாறுதல் செய்யப்படாமல் வெளியாகியுள்ளது. குறிப்பாக முகப்பில் எல்இடி விளக்குகள், தட்டையான டிசைன் கொண்ட முகப்பு விளக்கினை பெற்றுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் கூடுதலாக கவனத்தை செலுத்தியுள்ள ஸ்கோடா புதுப்பிக்கப்பட்ட இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் டயல்களுடன, நேர்த்தியான டேஸ்போர்டின் மத்தியில் 9.2 அங்குல கொலம்பஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்கி ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன், ஹேன்ட்ஸ் ஃபீரிபார்க்கிங் ஃபங்க்‌ஷன், 12வழிகளில் மாற்றியமைக்கும் உதவி பெற்ற ஒட்டுநர் இருக்கை ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

ஆக்டாவியா எஞ்சின்

இருவிதமான பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் என மொத்தமாக மூன்று எஞ்சினை பெற்று விளங்குகின்ற இந்த மாடலின் எஞ்சின் விபரம் பின் வருமாறு ;- பெட்ரோல் 1.4 லிட்டர் TSI  150 hp ஆற்றல் மற்றும் 250 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல் 1.8 லிட்டர் TSI  180 hp ஆற்றல் மற்றும் 250 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

டீசல் 2.0 லிட்டர் TDI  143 hp ஆற்றல் மற்றும் 320 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு அமைப்புகள்

பாதுகாப்பு சார்ந்த அமைப்புகளில் ஃபேஸ்லிஃப்ட் ஆக்டாவியா காரில்  ஹேன்ட்ஸ் ஃபீரிபார்க்கிங் ஃபங்க்‌ஷன், 8 ஏர்பேக்குகள், ஏபிஎஸ்,இபிடி டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹீல் ஹோல்ட் அசிஸ்ட் உள்பட பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.

2017 ஸ்கோடா ஆக்டாவியா விலை பட்டியல்

ரூ. 15.50 லட்சம் முதல் பெட்ரோல் ஆக்டாவியா ரூ. 20.9 லட்சம் வரை கிடைக்கின்றது. டீசல் ஆக்டாவியா ரூ. 16.9 லட்சம் முதல் ரூ.22.90 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கின்றது.

ஸ்காடோ ஆக்டாவியா வேரியன்ட்  விலை பட்டியல் – இந்தியா
Octavia Ambition 1.4 TSI MT ரூ. 15.5 லட்சம்
Octavia Style 1.8 TSI AT ரூ. 17.5 லட்சம்
Octavia Style Plus 1.8 TSI AT ரூ. 20.9 லட்சம்
Octavia Ambition 2.0 TDI MT ரூ. 16.9 லட்சம்
Octavia Style 2.0 TDI MT ரூ. 18.96 லட்சம்
Octavia Style 2.0 TDI AT ரூ. 20.50 லட்சம்
Octavia Style Plus 2.0 TDI AT ரூ. 22.9 லட்சம்

போட்டியாளர்கள்

2017 ஆக்டாவியா காருக்கு போட்டியாக கரோல்லா அல்டிஸ், வோக்ஸ்வேகன் ஜெட்டா, ஹூண்டாய் எலன்ட்ரா போன்றவை மிக முக்கியமான மாடல்களாகும்.

Recommended For You