2017 ஹூண்டாய் எக்ஸென்ட் வருகை விபரம்

0

மேம்படுத்தப்பட்ட 2017 ஹூண்டாய் எக்ஸென்ட் காம்பேக்ட் செடான் ரக மாடல் ஏப்ரல் 20ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. கூடுதல் வசதிகள் மற்றும் தோற்றத்தில் மாற்றங்களை பெற்றதாக எக்ஸ்சென்ட் வரவுள்ளது.

hyundai xcent special edition

Google News

 2017 ஹூண்டாய் எக்ஸென்ட்

  • எக்ஸ்சென்ட் செடான் ஏப்ரல் 20ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்படலாம்.
  • முன் மற்றும் பின்  தோற்றங்களில்அதிகப்படியான மாற்றத்தை பெற்றிருக்கும்.
  • புதிய 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் முந்தைய 1.1 லிட்டருக்கு மாற்றாக சேர்க்கப்பட்டிருக்கும்.

எக்ஸென்ட் செடான் ரக காரில் முந்தைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக கூடுதல் பவரை தரவல்ல மேம்படுத்தப்பட்ட புதிய 1.2 லிட்டர் டீசல்  75 hp மற்றும் 171Nm டார்க் வெளிப்படுத்தும் . 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். தற்பொழுது இந்த எஞ்சின் புதிய கிராண்ட் ஐ10 காரில் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.

hyundai xcent special edition infotainment

முன்பக்க பம்பர் , மேம்படுத்தப்பட்ட முகப்பு விளக்குடன் கூடிய பகல் நேர ரன்னிங் விளக்குகள் பெற்றதாகவும் , பனி விளக்கு அறையில் சிறிய மாற்றங்களை பெற்றிருப்பதுடன் 2017 கிராண்ட் ஐ10 காரின் வடிவ தாத்பரியங்களை சார்ந்ததாக அமைந்திருக்கும்.

இன்டிரியர்அமைப்பிலும் கூடுதல் வசதிகளை பெற்ற மாடலாக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ சாட்டிலைட் நேவிகேஷன்  மிரர் லிங்க் உள்பட டேஸ்போர்ட் மற்றும் இருக்கையில் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

hyundai xcent special edition rear

பின்பக்க அமைப்பில் பூட்டின் தோற்ற மாற்றங்களை பெற்றிருப்பதுடன் அகலமான புதிய டெயில் விளக்குகள் மற்றும் பம்பரிலும்சில மாற்றங்களை பெற்றதாக வரவுள்ளது.

மாருதி சுஸூகி டிஸையர், ஃபோர்டு ஆஸ்பயர், ஹோண்டா அமேஸ், டாடா ஜெஸ்ட், ஃபோக்ஸ்வாகன் ஏமியோ போன்ற கார்களுடன் பல முனைப் போட்டியை எக்ஸென்ட் சந்திக்கின்றது.

மாதிரி படம் ஆனிவர்சரி பதிப்பாகும்.