ஆடி Q7 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வெளியானது

0

audi q7 petrol launchedஆடி க்யூ7 எஸ்யூவி காரில் வெளியிடப்பட்டுள்ள 250 bhp பெட்ரோல் எஞ்சின் மாடல் பல்வேறு வசதிகளுடன் விற்பனையில் உள்ள டீசல்  Q7 மாடலை போலவே புதிய பெட்ரோல்  Q7 மாடலும் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஆடி Q7 பெட்ரோல்

கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்பட்ட டீசல் மாடல் க்யூ 7 எஸ்.யூ,வி காரை தொடர்ந்து வந்துள்ள மாடலில் 250 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TFSI எஞ்சின் பொருத்தப்பட்டு 370 என்எம் டார்கினனை வழங்குகின்றது. அனைத்து சக்கரங்களும் ஆற்றலை எடுத்துச் செல்ல குவாட்ரோ ஆல்வீல் டிரைவ் நுட்பத்துடன் கூடிய 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Google News

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.8 விநாடடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கின்ற க்யூ 7 எஸ்யூவி பெட்ரோல் மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு  233 கிமீ ஆகும்.

தோற்ற அமைப்பில் விற்பனையில் உள்ள டீசல் மாடலை போலவே ஒற்றை ஃபிரேம் கொண்ட கிரிலுடன் மிக சிறப்பான வெளிச்சத்தை வழங்கும் எல்இடி மேட்ரிக்ஸ் முகப்பு விளக்குடன், பக்கவாட்டில் நேர்த்தியான அலாய் வீல்,பின்புறத்தில் டைனமிக் எல்இடி டெயில் விளக்குகள் ஆகியவற்றுடன் கிடைக்கின்றது.

இன்டிரியரில்  360 டிகிரி கோண கேமரா உதவி , பார்க்கிங் அசிஸ்ட் , 19 ஸ்பீக்கர்களை கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம் , மேட்ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்குகள் , MMI இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் என பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

ஆடி க்யூ7 காரின் போட்டியாளர்கள் மெர்சிடிஸ் GLE 400, ஜீப் செரோக்கீ பெட்ரோல், பிஎம்டபிள்யூ X5 வால்வோ XC90 , மெர்சிடிஸ் GL மற்றும் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஆகும். ஆடி Q7 பெட்ரோல் விலை ரூ. 67.76 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)