விரைவில் 2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்.யு.வி அறிமுகம்

0

2018 ford ecosport 11அக்டோபர் மாத மத்தியில் மேம்படுத்தப்பட்ட 2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்.யு.வி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இந்த மாடலில் புதிய டிராகன் வரிசை 1.5 லிட்டர் Ti-VCT  பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்.யு.வி

2018 ford ecosport 12

குஜராத்தில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற புதிய டிராகன் பெட்ரோல் எஞ்சின் பெற்றதாக வரவுள்ளது. இதுதவிர முந்தைய 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவற்றை பெற்றதாக வரவுள்ளது.

இந்தியாவில் 80 சதவீத உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்ற புதிய டிராகன் சீரிஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தபட்டதாக விற்பனைக்கு வரவுள்ள எஞ்சின் விபரங்களை அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 1.5 லிட்டர் Ti-VCT (Twin Independent Variable Camshaft Timing) 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 ஹெச்பி ஆற்றல் மற்றும் 150 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது. இந்த எஞ்சின் மிகச் சிறப்பான என்விஎச் கட்டுப்பாடு கொண்டதாகவும், அதிகப்படியான மைலேஜ் தரவல்லதாக வெளியாக உள்ளது.

All New Ford 1.5L TiVCT 3Cyl Engine

மற்றொரு பெட்ரோல் மாடலாக சக்திவாய்ந்த 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது.

தோற்ற அமைப்பில் முந்தைய மாடலை விட குறிப்பிடதக்க வகையிலான புதுப்பிக்கப்பட்ட பம்பர் மற்றும் கிரில் ஆகியவற்றுடன் கூடுதலாக டெயில் விளக்குகள் புதுப்பிக்கப்பட்டிருக்கும். மேலும் இந்திய சந்தையில் பின்புறத்தில் ஸ்பேர் வீல் தொடர்ந்து  இடம்பெற்றிருக்கும்.

2018 ford ecosport 10

மேலும் புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடலில் மேம்படுத்தப்பட்ட ஃபோர்ட் SYNC 3 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே அம்சங்களை பெற்றதாக வரவுள்ளது. அடுத்த சில வாரங்களில் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2018 ford ecosport 9