2017 மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியானது

0

2017 Maruti Suzuki Celerio faceliftஇந்தியாவின் முதல் ஏஎம்டி எனப்படும் ஏஜிஎஸ் கியர் பெற்ற மாடலின் மேம்படுத்தப்பட்ட 2017 மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட்  கார் ரூ. 4.15 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட்

2017 Maruti Suzuki Celerio facelift front

விற்பனையில் உள்ள செலிரியோ காரில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல், 68hp ஆற்றல் மற்றும் 90Nm டார்க் வழங்குகின்றது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் என இருதேர்வுகளில் கிடைக்க உள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான தோற்ற பொலிவினை வழங்கும் வகையில் புதிய செலிரியோ காரில் புதுப்பிக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், க்ரோம் கார்னிஷ் மற்றும் பனி விளக்கு அறைக்கான பீசல் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

இன்டிரியர் அம்சங்களில் கருப்பு மற்றும் பீஜ் நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கூடுதலான பிரிமியம் அம்சத்தை பெற்றதாகவும், புதிய இருக்கை கவர்களை கொண்டுள்ளது.

2017 Maruti Suzuki Celerio facelift Interior

மொத்தமாக 12 விதமான மாறுபட்ட வகைகளில் கிடைக்கின்ற செலிரியோ காரின் அனைத்து வகைகளிலும் ஓட்டுநர் பக்க காற்றுப்பை மற்றும் ஓட்டுநர் இருக்கை பட்டை எச்சரிக்கை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்ஷனலாக அனைத்து வேரியன்டிலும் பயணிகளுக்கு காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

2017 Maruti Suzuki Celerio facelift interior 1

2017 மாருதி செலிரியோ கார் விலை பட்டியல்
வேரியன்ட் எரிபொருள் கியர்பாக்ஸ் எக்ஸ்-ஷோரூம் டெல்லி
Lxi Petrol MT ரூ.4,15,273
Lxi (O) Petrol MT ரூ.4,29,289
Vxi Petrol MT ரூ.4,48,418
Vxi Petrol AGS ரூ.4,91,418
Vxi (O) Petrol MT ரூ.4,63,908
Vxi (O) Petrol AGS ரூ.5,06,908
Zxi Petrol MT ரூ.4,73,934
Zxi Petrol AGS ரூ.5,16,934
Zxi (Opt) Petrol MT ரூ.5,22,043
Zxi (O) Petrol AGS ரூ.5,34,043
Vxi CNG MT ரூ.5,10,438
Vxi (O) CNG MT ரூ.5,25,577

AGS – Auto gear shift (AMT) MT -Manual Transmission

2017 Maruti Suzuki Celerio facelift rear