2017 மாருதி சுசுகி டிஸையர் ஸ்கெட்ச் படம் வெளியீடு

0

2017 மாருதி சுசுகி டிஸையர் காரின் அதிகார்வப்பூர்வ டிசைன் வரைபடத்தை மாருதி வெளியிட்டுள்ளது. வருகின்ற மே மாதம் புதிய டிஸையர் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் ஏப்ரல் 24ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2017 maruti suzuki dzire sketch

Google News

2017 மாருதி சுசுகி டிஸையர்

  • வரும் ஏப்ரல் 24ந் தேதி புதிய மாருதி சுசுகி டிஸையர் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • புதிய டிஸையர் கார் புதிய ஸ்விஃப்ட் மாடலை அடிப்பையாக கொண்டதாகும்.
  • 2017 டிசையர் மே மாத மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்படும்.

வருகின்ற ஏப்ரல் 24ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள மாருதி டிஸையர் கார் இந்தியாவில் விற்பனைக்கு மே மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய காரில் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இடம்பெற வாய்ப்பில்லை.

2017 maruti suzuki dzire sketch front

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை இடம் பெற்றிருக்கும். நடைமுறையில் உள்ள ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் டீசல் என்ஜின் மாடலில் கூடுதலாக சியாஸ் காரில் இடம்பெற்றுள்ள எஸ்ஹெச்விஎஸ் மைல்டு ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷனுடன் வரவுள்ளதாக, சோதனை ஓட்ட படங்கள் வாயிலாக உறுதியாகியுள்ளது.

பின்புற அமைப்பில் பூட் ஸ்பேஸ் வசதியுடன் வரவுள்ள டிஸையர் செடான் ரக மாடலில் க்ரோம் பட்டையுடன், எல்இடி டெயில் விளக்கினை பெற்றுள்ளது. பக்கவாட்டில் 15 அங்குல மல்டி ஸ்போக் டைமன்ட் கட் அலாய் வீலுடன் , ஒஆர்விஎம்-யில் டர்ன் இன்டிகேட்டர் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்டதாகவே அமைந்திருக்க உள்ள புதிய டிஸையர் கார் விலை விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.60,000 வரை கூடுதலாக அமைந்திருக்கலாம்.

2017 maruti suzuki dzire sketch rear