Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸ் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
28 February 2017, 1:55 pm
in Car News
0
ShareTweetSend

ரூ.56.15 லட்சம் ஆரம்ப விலையில் லாங் வீல் பேஸ் கொண்ட 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸ் சொகுசு செடான் கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான சந்தை பங்களிப்பினை இ கிளாஸ் கார் பெற்று விளங்குகின்றது.

20 ஆண்டுகளுக்கு மேலாக 34,000 கார்களுக்கு மேல் விற்பனை ஆகியுள்ள இ கிளாஸ் காரில் முதன்முறையாக கூடுதல் வீல் பேஸ் கொண்ட long-wheelbase மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் நீளம் 5,063mm மற்றும் வீல்பேஸ் 3,079 மிமீ ஆகும்.

பென்ஸ் இ கிளாஸ் வசதிகள்

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்ற புதிய பென்ஸ் இ கிளாஸ் காரில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் சிறப்பான இடவசதி போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது.

பென்ஸ் இ கிளாஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள ஹை-டெக் எல்இடி முகப்பு விளக்கில் 84 LED விளக்குகளை பெற்றுள்ளது. பின்புறத்திலும் எல்இடிடெயில் விளக்குகள் , பனாமரிக் மேற்கூறை போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

குறிப்பாக 360 கோன பாகையில் ரிவர்ஸ், முன் மற்றும் பின் பார்கிங் சமயத்தில் உதவும் வகையிலான கேமரா , 7 ஏர்பேக்குகள் , 64 விதமான வண்ணங்களை கொண்டு ஒளிரும் ஆம்பியன்ட் லைட்டிங் , 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நேவிகேஷன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளை பெற்றுள்ளது.

பென்ஸ் இ கிளாஸ் இன்ஜின்

E350d டீசல் வேரியன்டில் 3.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் வாயிலாக 258 bhp பவர் , 620 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. மாற்றாக பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் E200 வேரியன்டில் இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் 238 bhp பவருடன் 300 Nm டார்கை தரவல்லதாக விளங்குகின்றது.

இரு இன்ஜின் தேர்வுகளிலும் 9 விதமான வேகத்தை வழங்கும் வகையில் பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல தானியங்கி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸ்
  • 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸ் LWB  (E200) – ரூ. 56.15 லட்சம்
  • 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸ் LWB (E350d) – ரூ. 69.47 லட்சம்

(அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டெல்லி )

Related Motor News

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது

மெர்சிடிஸ் பென்ஸ் V கிளாஸ் எம்பிவி அறிமுக தேதி விபரம்

இந்திய மார்கெட்டில் எலக்ட்ரிக் கார்களை கொண்டு வர ஆய்வு செய்யப்படுகிறது: மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு

டைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் சி கிளாஸ் எடிசன் சி விற்பனைக்கு அறிமுகம்

1000 குதிரை திறனுடன் களமிறங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன்

Tags: Mereceds-Benz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata altroz 2025 bncap saftey ratings

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan