2017 நிஸான் டெரானோ எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டது

ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் 22 புதிய வசதிகளுடன் 2017 நிஸான் டெரானோ எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் இஎஸ்பி நிரந்தர அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.

2017 நிஸான் டெரானோ

  • 22 புதிய வசதிகளுடன் நிஸான் டெரானோ எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
  • ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் இஎஸ்பி போன்ற அம்சங்கள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.
  • 7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய டெரானோ எஸ்யூவி மாடலின் தோற்ற அமைப்பின் முகப்பில் சிறிய அளவிலான கிரில் மாற்றங்கள் , புதுப்பிக்கப்பட்ட பம்பர் , க்ரோம் பூச்சு கொண்ட பனிவிளக்கு அறை போன்றவற்றுடன்  எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் பல புதிய வசதிகள் இடம்பெற்றுள்ளது, அவற்றில் முக்கியமானவை புதிய 7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய நேவிகேஷன் மற்றும் குரல் வழி கட்டளை ஏற்கும் வசதி , க்ரூஸ் கன்ட்ரோல் ,ஹில் கிளைம்ப் அசிஸ்ட் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு , புதிப்பிக்கப்பட்ட ஃபேபரிக் அப்ஹோல்ஸ்ட்ரி , ஓட்டுநர் ஆர்ம்ரெஸ்ட் , ஒளிரும் விளக்கைபெற்ற பவர் வின்டோ பொத்தான்கள் போன்றவையாகும்.

புதிய டெரானோ எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவை 84 bhp ஆற்றலுடன் மற்றும் 200 Nm டார்க்கினை வழங்குகின்றது. மேலும் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் 108 bhp மற்றும் 243 Nm டார்க் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஏஎம்டி கியர்பாக்சுடனும் இடம்பெற்றுள்ளது.

முந்தைய மாடலின் ஆரம்ப விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமலே புதிய டெரானோ எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய டெரானோ எஸ்யூவி விலை அட்டவனை
வேரியன்ட் விலை
Terrano XL ₹ ரூ.9.99 லட்சம்
Terrano XED ₹ ரூ.9.99 லட்சம்
Terrano XLD (O) ₹ ரூ.11.92 லட்சம்
Terrano XVD PRE ₹ ரூ.13.60 லட்சம்
Terrano XVD PRE (AMT) ₹ ரூ.14.20 லட்சம்

 

Recommended For You