2017 வோக்ஸ்வாகன் பஸாத் விற்பனைக்கு அறிமுகமானது

0

2018 new volkswagen passatரூ.29.99 லட்சம் தொடக்க விலையில் 2017 வோக்ஸ்வாகன் பஸாத் செடான் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 8வது தலைமுறை மாடலாக புதிய வோக்ஸ்வாகன் பஸாத் MQB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட செடான் ரக மாடலாகும்.

2017 வோக்ஸ்வாகன் பஸாத்

2017 volkswagen passat car

43 ஆண்டுகால சர்வதேச அளவில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக தொடர்ந்து பல்வேறு சந்தைகளில் விற்பனையில் உள்ள பஸாத் சொகுசு செடான் காரின் 8 வது தலைமுறை மாடல் MQB தளத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும். மேலும் இந்த காரின் 50 சதவீத பாகங்களை ஸ்கோடா சூப்பர்ப் மாடல் பகிர்ந்து கொண்டுள்ளது.

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகள் உட்பட புதிய டிசைன் கொண்ட மாடலாக வந்துள்ள பஸாத் காரில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் புதிய 17 அங்குல அலாய் வீல் மற்றும் எல்இடி டெயில் விளக்குகளை கொண்டதாக வந்துள்ளது.

இன்டிரியர் அமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் 12.3 அங்குல திரையை பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றை கொண்டதாக வந்துள்ளது.

2017 volkswagen passat launched

177 ஹெச்பி குதிரை திறன் மற்றும் 350 Nm டார்கினை பெற்ற 2.0 லிட்டர் TDI டீசல் எஞ்சின் பெற்றதாக வந்துள்ளது. இதில் 6 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பெற்றதாக வந்துள்ளது.

இந்தியாவில் கம்ஃபார்ட் லைன் மற்றும் ஹைலைன் ஆகிய இரண்டு விதமான வேரியன்டில் பஸாத் கார் கிடைக்க தொடங்கியுள்ளது.

வோக்ஸ்வாகன் பஸாத் விலை பட்டியல்

2018 வோக்ஸ்வேகன் பஸாத் ரூ.. 29.99 லட்சம் (Comfortline) மற்றும் ரூ.. 32.99 லட்சம் (Highline) ஆகும். (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)