இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம், அமேஸ் காரின் அடிப்படையிலான இரண்டாம் தலைமுறை 2018 ஹோண்டா அமேஸ் கார் ரூ. 5.60 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

2018 ஹோண்டா அமேஸ் கார்

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் அமேஸ் கார் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், E, S, V மற்றும் VX என மொத்தம் நான்கு விதமான வேரியன்டில் அடிப்படை பாதுகாப்பு அம்சமாக இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ்,  Isofix  குழந்தை பாதுகாப்பு இருக்கை மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள ஹோண்டா சிட்டி செடான் மற்றும் அக்கார்டு காரின் தோற்ற உந்துதலின் பெரும்பகுதியை பெற்றுள்ள அமேஸ் செடான் கார் முந்தைய மாடலை விட 5mm நீளம் அதிகரிக்கப்பட்டு 3995mm, 15mm அகலம் அதிகரிக்கப்பட்டு 1695mm மற்றும் இரு சக்கரகளுக்கு இடையிலான வீல்பேஸ் 65mm வரை நீட்டிக்கப்பட்டு 2470mm ஆக உள்ள நிலையில் காரின் உயரம் 5mm வரை குறைக்கப்பட்ட 1500mm ஆக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

புதிய கிரில் மற்றும் புதிய எல்இடி லைட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட் மற்றும் பம்பர் அமைப்பினை பெற்று குறைந்த வேரியன்ட்களான E மற்றும் S ஆகியவற்றில் 14 அங்குல ஸ்டீல் வீல், V, VX ஆகியவற்றில் 15 அங்குல அலாய் வீலை கொண்டிருக்கின்றது. இன்டிரியரில் பல்வேறு புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டு இரு வண்ண கலவையில் டிஜிப்பேட் 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்களை கொணச்டிருக்கின்றது.

ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான், மல்டி ஸ்டியரிங் வசதி, ரியர் பார்க்கிங் செனுசார், மொபைல் -வைஃபை வாயிலாக நேவிகேஷனை பெறும் வசதி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளை கொண்டு 420 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்டினை பெற்றுள்ளது.

முந்தைய எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாமல் கூடுதல் டீசல் மாடலில் சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 90 ஹெச்பி ஆற்றலை வழங்குவதுடன், டீசல் எஞ்சின் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எஞ்சின் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இரு எஞ்சின்களும் கிடைக்க உள்ளது.

ஹோண்டா அமேஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.5 கிமீ (மேனுவல்) , 19.0 கிமீ (ஆட்டோமேட்டிக்) மற்றும் அமேஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.8 கிமீ (மேனுவல்) 23.8 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

New Honda Amaze Specifications
கியர்பாக்ஸ் எஞ்சின் பவர் டார்க் மைலேஜ் (ARAI)
5-Speed MT 1.2L i-VTEC (Petrol) 89 bhp at 6000 rpm 110 Nm at 4800 rpm 19.5 kmpl
CVT 1.2L i-VTEC (Petrol) 89 bhp at 6000 rpm 110 Nm at 4800 rpm 19 kmpl
5-Speed MT 1.5L i-DTEC (Diesel) 99 bhp at 3600 rpm 200 Nm at 1750 rpm  27.4 kmpl
CVT 1.5L i-DTEC (Diesel) 78 bhp at 3600 rpm 160 Nm at 1750 rpm 23.8 kmpl
2018 ஹோண்டா அமேஸ் கார் விலை பட்டியல்
VARIANTS பெட்ரோல் டீசல்
E ரூ. 5.59 லட்சம் ரூ.  6.69 லட்சம்
S MT ரூ. 6.49 லட்சம் ரூ.  7.59 லட்சம்
S CVT ரூ.  7.39 லட்சம் ரூ.  8.39 லட்சம்
V MT ரூ.  7.09 லட்சம் ரூ.  8.19 லட்சம்
V CVT ரூ.  7.99 லட்சம் ரூ.  8.99 லட்சம்
VX MT ரூ.  7.57 லட்சம் ரூ. 8.67 லட்சம்