Site icon Automobile Tamilan

2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது

ஏரிஸ் டிசைன் நிறுவனம் தங்களது லம்போர்கினி ஹரிகேன் -அடிப்படையிலான சூப்பர் காருக்கு பாந்தர் என்ற பெயரிட்டு உள்ளதை உறுதி செய்துள்ளது. கார் தயாரிப்பில் பிரச்சினைகள் உள்ளதாலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக டிமாண்ட் வந்துள்ளதை தொடர்ந்தும், இந்த புதிய கார்களின் தயாரிப்பை 21 கார்களாக லிமிட் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காரின் முதல் மாடல் இத்தாலியில் உள்ள மோடெனா தொழிற்சாலையில் இருந்து வரும் அக்டோபர் மாதம் வெளி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுவதும் மறைக்கப்பட்ட பாந்தர் கார்கள் தற்போது இத்தாலி சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. ஏரிஸ் டிசைன் நிறுவன அதிகாரியான லோட்டஸ் போஸ் டேனி பாஹ்ர் என்பவரும் இந்த கார் 2018ல் வெளிவரும் என்பதை உறுதி செய்துள்ளார். பல்வேறு மாடல்களுக்கு பின் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாடல்கள் முதல் முறையாக ஹரிக்கேன் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

1971ம் ஆண்டு வெளியான டி டாமஸோ பன்டாரா சூப்பர் காரின் வடிவத்தை கருத்தில் கொண்டே இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. பாந்தர்ஸ் கார்கள் கீழே போல்ட் ஆகும் வகையிலான ஹெட்லைட்கள் மற்றும் ரியர் புட்டேர்ச்செஸ் ஆகியவை காரின் வடிவத்தை அழகு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய சூப்பர் கார்கள், நவீன வசதிகளுடன், பெரிய டயமீட்டர் கொண்ட வீல்கள் மற்றும் ஹான்டில் இல்லாத டோர்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி பிரேலி பி ஜீரோ ரப்பர் உடன் F1 கலர் ஸ்டிரிப்களையும் கொண்டுள்ளது.

கோச்பில்ட் பாடியுடன் வெளிவரும் இந்த பாந்தர்கள், ஹாரிகேன் அண்டர்பின்னிங்கள் மற்றும் 5.2 லிட்டர் V10 இன்ஜின், 10 சிலிண்டர்களுடன் 641bbp (39bhp ஸ்டான்டர் ஹாரிகேனை விட அதிகமாகும்) மற்றும் லம்போர்கினி கார்களில் உள்ளதை போன்று 560Nm டார்க்யூ-வை கொண்டுள்ளது. இந்த காரின் செயல்திறன் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை

Exit mobile version