Home Car News

2018 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விபரம் வெளியானது

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி ரக வாகனங்களில் ஒன்றான க்ரெட்டா எஸ்யூவி, மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளுடன் கூடிய 2018 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மே 22ந் தேதி விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 2018 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஸ்கார்ப்பியோ, பொலிரோ, விட்டாரா பிரெஸ்ஸா, டஸ்ட்டர், கேப்டூர், டெரானோ. நெக்ஸான் , ஈக்கோஸ்போரட் உள்ளிட்ட மாடல்களுடன் சந்தையை பகிர்ந்து கொண்டுள்ள க்ரெட்டா அறிமுகம் செய்த தேதி முதல் மிக சிறப்பான விற்பனையை எட்டி வருகின்றது.

புதிய க்ரெட்டா மாடலில் முந்தைய எஞ்சினில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை, 1.6 லிட்டர் பெட்ரோல், 1.6 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் ஆகிய மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது. 90 ஹெச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் வழங்கும் மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அடுத்து 1.6 லிட்டர் பெட்ரோல் 123 ஹெச்பி ஆற்றல் மற்றும் 151 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் 128 ஹெச்பி ஆற்றல் மற்றும் 260 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இரண்டிலும் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா புதிய கிரில் பெற்றதாக விளங்குகின்றது. புதிய புராஜெக்டர் ஹெட்லைட் , எல்இடி ரன்னிங் விளக்குடன், புதுப்பிக்கப்பட்ட முன் மற்றும் பின் பம்பர், புதுவிதமான 17 அங்குல அலாய் வீல் கொண்டதாக வந்துள்ளது.

7 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

2018 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் நாளை மே 22ந் தேதி விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version