2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

0

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா நிறுவனத்தின், மேம்படுத்தப்பட்ட 2018 மஹிந்திரா XUV500 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ₹ 12.32 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

 2018 மஹிந்திரா XUV500

இந்தியாவின் மிக பிரபலமான எஸ்யூவி ரக மாடல்களில் ஒன்றான மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடலின் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி 500 பல்வேறு புதிய அம்சங்களை பெற்று பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கு வெளியிடபபட்டுள்ளது.

Google News

புதிதாக சிவப்பு மற்றும் காப்பர் ஆகிய நிறங்களுடன் வெள்ளை, பர்பிள், பிளாக், சில்வர் மற்றும் பிரவுன் ஆகிய 7 நிறங்களை பெற்றதாக வந்துள்ள எக்ஸ்யூவி 500 காரின் முகப்பு அமைப்பு முற்றிலும் புதுப்பிகப்பட்டு முந்தைய எஸ் வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகளுக்கு மாற்றாக செங்குத்தான எல்இடி ஸ்டீரிப் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் புதிய வடிவத்தை பெற்ற 18 அங்குல அலாய் வீல் (W11 (O))  மற்ற வேரியன்ட்களில் 17 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பம்பர் உட்பட டெயில்கேட் மற்றும் எல்இடி டெயில் விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரில் இரட்டை வண்ண கலவையிலான இன்டிரியரில் சென்ட்ரல் கன்சோல் பகுதியில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட பல்வேறு நவீன அம்சங்களை கொண்டிருக்கின்றது.

ஏபிஎஸ், இபிடி இரட்டை காற்றுப்பைகள் அனைத்து வேரியன்டிலும் டாப் வேரியன்டில் 6 காற்றுப்பைகள் வழங்கப்பட்டு கீலெஸ் என்ட்ரி, மழையை உணர்ந்து இயங்கும் வெப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப என பலவற்றை கொண்டுள்ளது.

மஹிந்திரா XUV500 எஸ்யூவி மாடலில் 2.2 லிட்டர் எம் ஹாக் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய டீசல் எஞ்சினை காட்டிலும் 15 ஹெச்பி மற்றும் 30 என்எம் டார்க் அதிகரிக்கப்பட்டு, 6வது தலைமுறை டர்போசார்ஜரை (electronically controlled variable geometry turbocharger (EVGT)  பெற்று 155 ஹெச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

140 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வழங்கும் பெட்ரோல் எஞ்சினில் 6  வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் இடம்பெற்றுள்ளது.

Prices of the 2018 Mahindra XUV500 Facelift
Variants Diesel MT Diesel AT Petrol AT
W5 ₹ 12.32 லட்சம்  —
W7 ₹ 13.58 லட்சம் ₹ 14.78 லட்சம்
W9 ₹ 15.23 லட்சம் ₹ 16.43 லட்சம்
W11 ₹ 16.43 லட்சம் ₹ 17.63 லட்சம்
W11 (O) ₹ 16.68 லட்சம் ₹ 17.88 லட்சம்
W11 G (AT) ₹ 15.43  லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் மும்பை)