ரூ.7.74 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான 2019 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் சிறப்புகள்

hyundai i20 active

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரின் மேம்பட்ட மாடல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கூடுதலான வசதிகளை பெற்றுள்ளது. என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லை.

முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட ரூ.2,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ள 2019 ஹூண்டாய் ஐ 20 ஆக்டிவ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 82 பிஹெச்பி மற்றும் 115 என்எம் டார்க் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1.4 லிட்டர் டீசல் 89 பிஹெச்பி மற்றும் 220 என்எம்  டார்க் பெற்று 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2019 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் விற்பனையில் உள்ள மாடலின் டிசைன் அமைப்பினை தக்கவைத்துக் கொண்டு சில கூடுதலான மாற்றங்களை மட்டும் பெற்றுள்ளது. எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்டர் முகப்பு விளக்கு, மூடுபனி விளக்குகள், எல்இடி டெயில்லைட்டுகள், டைமன்ட் கட் அலாய் வீல். இந்த காரின் முன் மற்றும் பின்புற பம்பரில்  ஸ்கிட் பிளேட்டையும், ரூஃப் ரெயில் ஆகியவற்றைப் பெறுகிறது.

ஐ 20 ஆக்டிவ் பழைய மாடலின் அதே அமைப்பைப் பெறுகிறது. ஆனால் ஏர் வென்ட் மற்றும் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ்-பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங் போன்றவற்றை பெற்றுள்ளது.

ரூ.7.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ள 2019 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் S, SX மற்றும் SX Dual-Tone ஆகிய வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது.