5.45 லட்சம் ரூபாய்க்கு 2019 மாருதி பலேனோ கார் வெளியானது

முந்தைய பெலினோ மாடலை விட பல்வேறு மாறுதல்களை பெற்ற 2019 மாருதி பலேனோ காரின் தொடக்க விலை 5.45 லட்சம் ரூபாய்க்கு வந்துள்ளது. ஸ்டைல் மற்றும் கூடுதல் வசதிகளை பலேனோ கார் பெற்றுள்ளது.

2019 மாருதி சுஸூகி பலேனோ

பிரிமியம் ஹேட்ச்பேக் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி பலேனோ கார் மிக அமோகமான வரவேற்ப்பினை பெற்ற மாடலாக இந்திய சந்தையில் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காருக்கு இணையான சந்தை மதிப்பை பெற்று வரும் பலேனோ கார் நெக்ஸா டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றது.

முந்தைய மாடலை விட டீசல் கார் விலை ரூ. 30,000 முதல் ரூ.44,000 வரை உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து பெட்ரோ மாடல் விலை ரூ. 7,000 முதல் ரூ.21,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய 2019 மாருதி சுஸூகி பலேனோ கார் விலை வேரியன்ட் (விற்பனையக விலை டெல்லி) பின் வருமாறு ;-

பலேனோ பெட்ரோல் விலை பட்டியல்

Sigma – ரூ. 5.45 லட்சம்
Delta – ரூ. 6.16 லட்சம்
Zeta – ரூ. 6.84 லட்சம்
Alpha – ரூ. 7.45 லட்சம்
பலேனோ பெட்ரோல் சிவிடி விலை பட்டியல்
Delta – ரூ. 7.48 லட்சம்
Zeta – ரூ. 8.16 லட்சம்
Alpha – ரூ. 8.77 லட்சம்
பலேனோ டீசல் கார் விலை பட்டியல்
Sigma – ரூ. 6.6 லட்சம்
Delta – ரூ. 7.31 லட்சம்
Zeta – ரூ. 7.99 லட்சம்
Alpha – ரூ. 8.6 லட்சம்

புதிய பலேனோ

முந்தைய மாடலின் தோற்ற அமைப்பினை விட மிக ஸ்டைலிஷாகவும்,கம்பீரத்தை வழங்கும் வகையிலான கிரில் மற்றும் பம்பர் அமைப்பினை பெற்று விளங்குகின்றது.

புதுப்பிக்கப்பட்ட முன்புற பம்பருடன் மிக அகலமான ஏர்டேம் பெற்றதாக பனி விளக்கு செங்குத்தாக வழங்கப்பட்டுள்ளது. கிரில் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு ஹெச்ஐடி ஹெட்லைட்டுக்கு மாற்றாக எல்இடி ப்ராஜெக்டர் முகப்பு விளக்கை பெற்றிருக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட வடிவத்தை பெற்ற இரு கலவை நிறத்திலான 16 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது.

இன்டிரியரில் கருப்பு மற்றும் நீல நிறத்தை பெற்ற இரு வண்ண கலவையிலான இருக்கை, டேஸ்போர்டு, டோர் பேடுகள் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வேகன்ஆர் காரில் இடம்பெற்றிருந்த மாருதி ஸ்மார்ட்பிளே 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே அம்சத்துடன், ரிவர்ஸ் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகளை புதிய பலேனோ கார் பெற்றுள்ளது.

83 bhp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 115 NM மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 21.4கிமீ ஆகும். இதில் 5 வேக மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வினில் பெறலாம். 74 bhp ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 190 NM மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 27.39கிமீ ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

மற்றபடி பலேனோ காரி புதிதாக மேக்மா மற்றும் பினீக்ஸ் ரெட் என இரு நிறங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான முதல் மாடலை தொடர்ந்து தற்போது மேம்பட்ட மாடல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மாதந்தோறும் சராசரியாக 12,000க்கு அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த நவம்பர் 2018-ல் விற்பனைக்கு வந்த 38 மாதங்களில் 5 லட்சம் விற்பனை இலக்கை பலேனோ கடந்து சாதனை படைத்துள்ளது.

2019 Maruti Suzuki Baleno facelift image gallery

Exit mobile version