புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2019 மாருதி சுசூகி இக்னிஸ் (Maruti Ignis) விற்பனைக்கு அறிமுகமானது . இக்னிஸ் காரின் ஆரம்ப விலை ரூபாய் 4.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி இக்னிஸ் காரின் சிறப்புகள் மற்றும் வசதிகள்

பெரியளவில் மாற்றங்கள் இல்லாமல் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் மற்றும் ஒரு என்ஜின் இரு கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றுள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் புதிய இக்னிஸ் காரில் குறிப்பாக ரூஃப் ரெயில் மற்றும் இன்டிரியரில் மாருதியின் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மட்டும் புதிதாக பெற்றுக் கொண்டுள்ளது. மற்றபடி எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களாக ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்ட வசதிகள் முன்பே இருந்த நிலையில் தற்போது அனைத்து வேரியன்டிலும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீட் அலெர்ட் சிஸ்டம் மற்றும் பயணிகளுக்கான இருக்கை பட்டை அணியவேண்டிய அவசியத்தை உணர்த்தும் எச்சரிக்கை விளக்குகள் இடம்பெற்றிக்கின்றது.

83 BHP மற்றும் 113 Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை.

2019 மாருதி இக்னிஸ் விலை பட்டியல்

இக்னிஸ் Sigma – Rs. 4.79 lakhs
இக்னிஸ் Delta – Rs. 5.40 lakhs
இக்னிஸ் Zeta – Rs. 5.82 lakhs
இக்னிஸ் Alpha  – Rs. 6.67 lakhs
இக்னிஸ் Delta AGS – Rs. 5.87 lakhs
இக்னிஸ் Zeta  AGS – Rs. 6.29 lakhs
இக்னிஸ் Alpha AGS – Rs. 7.14 lakhs

(விற்பனையக விலை டெல்லி)

Exit mobile version