Site icon Automobile Tamilan

Maruti Suzuki Wagon R : மாருதி சுசூகி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்

Maruti Suzuki wagon r review in tamil

இந்திய சந்தையில் வெளியாகியுள்ள மூன்றாவது தலைமுறை மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள், வேகன் ஆர் காரின் விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். மிகவும் சவாலான விலையில் போட்டியாளர்களை எதிர்களொள்ளும் நோக்கில் வேகன்ஆரில் இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வினை பெற்று விளங்குகின்றது.

மாதந்தோறும் கார் விற்பனையில் முதல் 10 இடங்களுக்குள் ஒன்றாக விளங்கி வரும் வேகன்ஆர் காருக்கு புதிய மேம்பாடுகள் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தோற்றம்

சர்வதேச அளவில் 7-வது தலைமுறை வேகன் ஆர் கார் விற்பனை செய்யப்பட்டு வரும், இந்திய சந்தைக்கு என பிரத்தியேகமான கட்டுமானத்தை பெற்ற புதிய ஹார்டெக்ட் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மூன்றாவது தலைமுறை வேகன்ஆரில் கவனிக்கதக்க பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.

முந்தைய மாடலை விட கூடுதல் வீல் பேஸ் பெற்ற வேகன்ஆரின் அளவுகள், சுமார் 65 மிமீ கூடுதலாக அதிகரிக்கப்பட்டு, 3655 மிமீ நீளம் பெற்றுள்ளது. இதைத் தவிர அகலம் 140 மிமீ அதிகரிக்கப்பட்டு 1620 மிமீ ஆகவும், ஆனால் வாகனத்தின் உயரம் 25 மிமீ குறைக்கப்பட்டு 1625 மிமீ ஆக வெளிவந்துள்ளது.

ஸ்டைலிஷான ஹெட்லைட் தோற்றத்தை கொண்டுள்ள இந்த காரில் பம்பர் புதுப்பிக்கப்பட்டு, புதிதாக பெற்ற கிரில் அமைப்பில் நீளமான க்ரோம் பட்டைக்கு மத்தியில் அமைந்துள்ள சுசூகி லோகோ கவனத்தை பெறுகின்றது. பக்கவாட்டில் மேம்படுத்தப்பட்ட வீல் ஆர்ச், மிதக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தவதற்கான முயற்சியில் சுசூகி சிறப்பாகவே வெற்றி கண்டுள்ளது. சி பில்லர் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. வால்வோ காரின் மாடல்களில் இடம்பெற்றுள்ளதை போன்ற செங்குத்தான டெயில் விளக்குகள் மற்றும் பின்புற பம்பர் வெகுவாக கவனத்தை ஈர்க்கின்றது.

புதிய வேகன்-ஆரில் நீலம், ஆரஞ்சு நிறங்கள் புதிதாக இணைக்கப்பட்டு வெள்ளை, சில்வர், கிரே மற்றும் பிரவுன் என மொத்தமாக 6 நிறங்களில் கிடைக்க உள்ளது.

இன்டிரியர்

வேகன்ஆர் காரின் இன்டிரியர் அமைப்பில் கருப்பு மற்றும் பீஜ் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் பல்வேறு மாற்றங்கள் பெற்றதாக விளங்குகின்றது. குறிப்பாக டாப் வேரியன்டில் 7 இன்ச் தொடுதிரை ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சங்களுடன், புளூடூத் , யூஎஸ்பி தொடர்பு, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் , கீலெஸ் என்ட்ரி ஆகியவற்றை பெற்றுள்ளது.

தாரளமான இடவசதியை பெற்ற புதிய வேகன்ஆரில், 341 லிட்டர் கொள்ளளவு பூட்ஸ்பேஸ் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பின்புற வரிசை இருக்கையை மடக்கினால் அதிகபட்சமாக 741 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ் கிடைக்கின்றது.

வேகன் ஆர் என்ஜின்

முந்தைய தலைமுறை வரை 1.0 லிட்டர் என்ஜின் மட்டும் வழங்கி வந்த மாருதி, முதன்முறையாக இரண்டு விதமான என்ஜின் தேர்வினை வழங்கியுள்ளது. சற்று கூடுதலான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் என்ஜின் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கின்றது.

புதிதாக K12M 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பிஎஸ் மற்றும் 118 என்எம் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

மாருதி வேகன்ஆர் காரின் 1.2 லிட்டர் என்ஜின் ARAI மைலேஜ் லிட்டருக்கு 21.5 கிமீ ஆகும். சராசரியான ஓட்டுதல் மைலேஜ் சுமார் 15-16 கிமீ வழங்கலாம்.

முந்தைய 1.0 லிட்டர் என்ஜினை விட 10 சதவீத சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜ் வெளிப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ள K10B 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறுகின்றது.

மாருதி வேகன்ஆர் காரின் 1.0 லிட்டர் என்ஜின் ARAI மைலேஜ் லிட்டருக்கு 22.5 கிமீ ஆகும். சராசரியான ஓட்டுதல் மைலேஜ் சுமார் 17-18 கிமீ வழங்கலாம்.

வேரியன்ட்கள்

பாக்ஸ் வடிவத்தை பெற்ற வேகன்ஆரில் மொத்தமாக 7 வேரியன்ட்கள் மற்றும் கூடுதல் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் என்ஜின் தேர்வில் LXi, VXi மற்றும் VXi AGS போன்ற பேஸ் வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 1.2 லிட்டர் என்ஜின் VXi , VXi AGS, ZXi மற்றும் ZXi AGS போன்ற வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள வேகன்ஆரில் உள்ள அனைத்து வேரியன்டிலும் டூயல் ஏர்பேக் சிஸ்டம், ஏபிஎஸ், இபிடி மற்றும் ரியர்பார்க்கிங் சென்சார் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

டாப் வேரியன்டில் ஹை ஸ்பீடு அலர்ட், இருக்கை பட்டை ப்ரீ ட்ன்ஸர் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

வேகன்ஆர் காரின் விலை பட்டியல்

வேகன்ஆர் 1.0 விலை பட்டியல்

LXi – ரூ.4.29 லட்சம்

VXi – ரூ.4.78 லட்சம்

VXi AGS – ரூ.5.25 லட்சம்

வேகன்ஆர் 1.2 விலை பட்டியல்

VXi – ரூ.4.98 லட்சம்

VXi AGS – ரூ.5.25 லட்சம்

ZXi – ரூ.5.31 லட்சம்

ZXi AGS – ரூ.5.78 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் சென்னை )

போட்டியாளர்கள்

டட்சன் கோ, ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா டியாகோ, மற்றும் மாருதி செலிரியோ போன்ற கார்களை எதிர்கொள்ள உள்ள மாருதி வேகன்ஆர் மிக சவாலானதாக விளங்கும்.

வேகன்ஆர் வாங்கலாமா ?

தரமான சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் கொண்ட மாருதியின் வேகன்ஆர் காரை தேர்ந்தெடுக்கலாம். நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற மிக சிறந்த காராக விளங்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Maruti Suzuki WagonR Image Gallery

 

Exit mobile version