வெளியானது 2019 சுசூகி விட்டாரா ஃபேஸ்லிப்ட்

தங்கள் எஸ்யூவிகளை மார்க்கெடில் அறிமுகம் செய்வதற்கு முன்பு சுசூகி மோட்டார் நிறுவனம், 2019 விட்டாரா ஃபேஸ்லிப்ட்-களை அதிகாரப்புர்வமாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இந்த வாகனத்தில் லீக் புகைப்படங்களை நாம் பகிர்ந்து கொண்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வ புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் இந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, அழகிய வடிவில் உருவாகப்பட்டுள்ள 2019 சுசூகி விட்டாரா காரில் பெரியளவிலான காஸ்மேடிக், தொழில்நுட்ப மற்றும் நவீன வசதிகளுடன், 2019ம் ஆண்டு மாடலாக வெளியாக உள்ளது.

இதில் கூடுதலாக பல்வேறு டிசைன் அப்டேட்களுடன் வெளியாக உள்ள 2019 விட்டாரா, இரண்டு புதிய கலர் ஆப்சன்களுடன், புதிய தொழில்நுட்ப மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட தொகுப்பை கொண்டுள்ளது. இந்த காரில் விலை, கார் அறிமுகம் செய்யப்படும் தேதியை ஒட்டி சில நாட்களுக்கு முன்பாக்க அறிவிக்கப்படும்.

மாருதி கார் வகைளில் இந்திய உறவினரான மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரிகளை போன்று இல்லாமல் சுசூகி விட்டாரா SUV அளவில் பெரியதாக 4.2 மீட்டர் நீளத்தில் இருக்கும். வெளிப்புறதோற்றத்தில் 2019 மாடல்கள் மேம்படுத்தப்பட்ட முகம், மாற்றியமைக்கப்பட்ட கிரில் மற்றும் பேட், வெர்டிக்கலாக பொருத்தப்பட்டுள்ள குரோம் ஸ்லாட்கள், மற்றும் பெரிய ஏர்டம் மற்றும் பெரிய LED பகலில் எரியும் விளக்குகள் ஆகியவற்றுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பம்பர் ஆகியவைகளுடம் வெளியாக உள்ளது. மேலும் மாற்றங்கள் இல்லாத அழகிய வடிவத்தில் புதிய செட் அலாய்களுடனும் இருந்தபோதிலும், ரியரில் SUV வசதிகளாக புதிய டிசைன்களில் வடிவமைக்கப்பட்டுள்ள LED காம்பினேஷன் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மாடல்களில் கேபின், மேம்படுத்தப்பட்ட தரமான பொருட்களினால் செய்யப்பட்ட உள்ளரங்காரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் டஸ்போர்டுகளின் மேற்புற இன்ஸ்டுரூமென்ட் பேனல் சாப்ட்-டச் மெட்டிரீயல் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இன்ஸ்டுரூமென்ட் கிளச்ட்டர் புதிய வடிவம் பெற்றுள்ளதோடு, கலர் சென்ட்ரல் இன்போர்மேசன் டிஸ்பிளேயும் பொருத்தப்பட்டுள்ளது.

டாப்-எண்டு வகை SUV-க்கள் சில புதிய வசதிகளுடன், அதாவது டுயல் சென்சார் பிரேக் சபோர்ட், லேன்-னில் இருந்து விலகி சென்றால் அதை தடுத்து எச்சரிக்கை செய்யும் வசதி, டிராப்பிக் சைன்களை அறிந்து கொண்டு எச்சரிப்பது, பிளைன்ட் ஸ்பாட்களை கண்காணிப்பது மற்றும் ரியர் கிராஸ் டிராப்பிக் அலர்ட் போன்ற வதிகளுடன் வெளியாகும்.

2019 சுசூகி விட்டாரா கார்கள், 1.0 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் டார்போசார்ஜ்டு பெட்ரோல் இஞ்சின்களுடனும், S-கிராஸ் மாடல்களில் பிரிட்டன் விவரக்குறிப்புகளை வாங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் மாற்றியமைக்கப்பத்டுள்ளது

குறைந்த விலை கொண்ட கார்கள் 109 bhp, 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டார்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்களுடன், சுசூகி ALLGRIP நான்கு வீல் டிரைவ் சிஸ்டமுடனும், ஆப்சனாக மெனுவல் டிரான்ஸ்மிஷன் வெர்சனும் பொருத்தப்பட்டுள்ளது.

உயர்தரம் கொண்ட வகைகள் 1.4 லிட்டர் லிட்டர் பூஸ்டர்ஜெட் டார்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்களுடன், இந்த இன்ஜின்கள் 138bhp மற்றும் 220Nm உச்சபட்ச டார்க்யூவில் இயக்கும் இவர் 1,500 rpm முதல் 4,000 rpm களில் கிடைக்கும்.

தற்போது விட்டாரா கார்கள் உலகளவில் 191 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் SUV-களின் ஒட்டுமொத்த விற்பனை சமீபத்தில் 3.7 மில்லியன் யூனிட்களை கடந்துள்ளது.

இந்தியாவில் SUV-களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள மாருதி சுசூகி நிறுவனம் இந்த அறிமும் மூலம், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் வாகனங்களுக்கு போட்டியை உருவாக்க முடிவு செய்துள்ளது.

இதை உண்மையாக்கும் வகையில், SUV-களின் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவின் ஒன்றிரண்டு இடங்களில் சோதனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. எனினும், இந்தியாவில் விட்டாரா SUV-களை அறிமும் செய்வதை கார் தயாரிப்பாளரே முடிவு செய்வார்கள். அப்படி முடிவு செய்தால், நாம் அழகுபடுத்தப்பட்ட விட்டாரா கார்களை பெறுவோம்.

Exit mobile version