5 நட்சத்திர மதிப்பை பெற்ற புதிய ஹோண்டா சிட்டி – ASEAN NCAP

தாய்லாந்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் 5 நட்சத்திர மதிப்பீட்டை ஆசியான் கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவில் பெற்று அசத்தியுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ள புத்தம் புதிய ஹோண்டா சிட்டி கார் மாடல் கொரோனா வைரஸ் பரவலால் சில வாரங்கள் தாமதமாக விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தாய்லாந்தில் விற்பனை செய்யப்படுகின்ற சிட்டி காரினை ஏசியான் கிராஷ் டெஸ்ட் மோதலில் சோதனை செய்த முடிவுகள் வெளியாகியுள்ளது.

கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்ட தாய்லாந்தின் மாடலில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. சிட்டி காரின் முன்பக்க சோதனையில் நிலையானதாக இருந்தது மற்றும் முன்பக்கத்தில் உள்ள டம்மிகள் இரண்டும் நல்ல பாதுகாப்பைப் பெற்றுள்ளது. ஆனால், காலின் கீழ் பகுதியில் மட்டும் குறைந்த பாதுகாப்பினை பெற்றதாக வந்துள்ளது.

சிட்டி கார் ஏசியான் கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவில் 100 புள்ளிகளுக்கு 86.54 புள்ளிகளை பெற்றுள்ளது. வயது வந்தோர் பாதுகாப்பில் 44.83 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில் 22.85 புள்ளிகளும், பாதுகாப்பு சார்ந்த வசதிகளில் 18.89 புள்ளிகளை பெற்றுள்ளது.

Exit mobile version