Automobile Tamilan

2020 ஹோண்டா சிஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது

honda cr-v

அடுத்த வருடம் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிஆர்-வி ஃபேஸலிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிஆர் வி காரின் மிட் சைக்கிள் அப்டேட் பெற்ற புதிய மாடலாக வந்துள்ளது.

1995 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட சிஆர்-வி கிராஸ்ஓவர் ஸ்டைல் எஸ்யூவி மாடல் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அபரிதமான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகின்ற கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடலாக இந்த கார் விளங்குகின்றது.

முதற்கட்டமாக இடதுபுற டிரைவிங் வெர்ஷனில் வெளியாகியுள்ள சிஆர்-வி காரின் முகப்பு தோற்ற அமைப்பு கிரில் புதுப்பிக்கப்பட்டு கூடுதலான அளவில் க்ரோம் பாகங்களை கொண்டுள்ளது. ஹெட்லைட்டில் கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற பம்பரில் சிறிய மாற்றம் மற்றும் புதிய 18 அங்குல மற்றும் 19 அங்குல அலாய் வீல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை பெரிய அளவிலான எந்த மாற்றங்களும் இல்லை. சிறிய அளவில் ஸ்டைலிங் டிவிக்ஸ் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிஎஸ் 6 என்ஜின் பெற்று 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version